• Dec 01 2024

தொண்டமான் தொழில் பயிற்சிக் கல்லூரிக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பிரதான நிகழ்வு...!samugammedia

Sharmi / Feb 20th 2024, 3:58 pm
image

“இன்றைய நவீன உலகை வெல்வதற்கு கல்வியும், தொழில்நுட்ப கல்வியும் எவ்வளவு முக்கியமோ அதேபோல பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும், தமக்கான தொழில் பாதையை நிர்ணயித்துக்கொள்வதற்கும் தொழில் கல்வி என்பது மிக முக்கியமாகும்  என  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சிக் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் தொழிற்பயிற்சிகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பிரதான நிகழ்வு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனின் பங்கேற்புடன் இன்று(20) நடைபெற்றது.

சௌமியமூர்த்தி ஞாபகார்த்த மன்றத்தின் சிரேஷ்ட முகாமையாளர் தேசப்பந்து வீ.ஜீவனந்தராஜா, நிலையத்தின் அதிபர் கெப்ரியல், பொலிஸ் அதிகாரிகள், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பில் இருந்து நிகழ்நிலை ஊடாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், புதிய மாணவர்களை வரவேற்றதுடன், அவர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.



 



 

தொண்டமான் தொழில் பயிற்சிக் கல்லூரிக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பிரதான நிகழ்வு.samugammedia “இன்றைய நவீன உலகை வெல்வதற்கு கல்வியும், தொழில்நுட்ப கல்வியும் எவ்வளவு முக்கியமோ அதேபோல பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும், தமக்கான தொழில் பாதையை நிர்ணயித்துக்கொள்வதற்கும் தொழில் கல்வி என்பது மிக முக்கியமாகும்  என  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.அட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சிக் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் தொழிற்பயிற்சிகளுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் பிரதான நிகழ்வு, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனின் பங்கேற்புடன் இன்று(20) நடைபெற்றது.சௌமியமூர்த்தி ஞாபகார்த்த மன்றத்தின் சிரேஷ்ட முகாமையாளர் தேசப்பந்து வீ.ஜீவனந்தராஜா, நிலையத்தின் அதிபர் கெப்ரியல், பொலிஸ் அதிகாரிகள், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.கொழும்பில் இருந்து நிகழ்நிலை ஊடாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், புதிய மாணவர்களை வரவேற்றதுடன், அவர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.  

Advertisement

Advertisement

Advertisement