கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதாக கூறி இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள்.
தற்போது போலி நோட்டுக்களுடன் வருகிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபையின் முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.
இன்று, (26) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பணம்கொடுத்து, மதுபான போத்தல்களை கொடுத்து மக்களை ஏமாற்றியவர்கள்.
இம்முறை தேர்தலில் போலி நோட்டுக்களுடன் மக்களை ஏமாற்று சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு போலி நோட்டுக்களுடன் சிலர் கைது செய்யப்பட்ட விடயம் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட அதே கட்சியைச் சேர்ந்த நபர்கள் சந்திவெளியில் அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களை தாக்க முற்பட்ட போது அவர்களை பொலீசார் கைது செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
இதேபோல் தான் குறித்த கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் மக்களை அச்சுறுத்தி வன்முறைகளில் ஈடுபட்டு வாக்குகளை பெற்றுக் கொண்டார்கள்.
இதேபோல் தற்போதைய புதிய ஜனாதிபதி அவர்களின் இந்த நாட்டில் உள்ள இலட்ச ஊழல் செய்த, கொலைக் குற்றக்களை செய்த அரசியல் வாதிகளை தனது ஆட்சியில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கத்தோலிக்க திருச்சபையின் ஆண்டகை பேராயர் மால்கம் ரஞ்சித் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநாயக்க அவர்கள் கூறியுள்ள இன் நிலையில் ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் கிழக்கில் தான் உள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இம்முறை அவர்களுக்கு வாக்களித்தால் மட்டக்களப்பு மக்கள் ஒரு குற்றவாளிக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினார்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்.
எனவே இலங்கை தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் அவர்களுடன் இணைந்து செல்லக் கூடிய இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத வன்முறைகள் அற்ற கட்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரே கட்சி தமிழரசுக் கட்சி என்ற வகையில் இம்முறை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிப்பது டன் எனது இலக்கம் 7 க்கும் தமிழரசுக் கட்சியில் உள்ள ஏனைய இருவருக்கும் என மூவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றியவர்கள் : தற்போது போலி நோட்டுக்களுடன் வருகிறார்கள் - தி.சரவணபவன் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதாக கூறி இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள். தற்போது போலி நோட்டுக்களுடன் வருகிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபையின் முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். இன்று, (26) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பணம்கொடுத்து, மதுபான போத்தல்களை கொடுத்து மக்களை ஏமாற்றியவர்கள். இம்முறை தேர்தலில் போலி நோட்டுக்களுடன் மக்களை ஏமாற்று சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு போலி நோட்டுக்களுடன் சிலர் கைது செய்யப்பட்ட விடயம் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.இதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட அதே கட்சியைச் சேர்ந்த நபர்கள் சந்திவெளியில் அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களை தாக்க முற்பட்ட போது அவர்களை பொலீசார் கைது செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. இதேபோல் தான் குறித்த கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் மக்களை அச்சுறுத்தி வன்முறைகளில் ஈடுபட்டு வாக்குகளை பெற்றுக் கொண்டார்கள்.இதேபோல் தற்போதைய புதிய ஜனாதிபதி அவர்களின் இந்த நாட்டில் உள்ள இலட்ச ஊழல் செய்த, கொலைக் குற்றக்களை செய்த அரசியல் வாதிகளை தனது ஆட்சியில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார்.அந்த வகையில் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கத்தோலிக்க திருச்சபையின் ஆண்டகை பேராயர் மால்கம் ரஞ்சித் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநாயக்க அவர்கள் கூறியுள்ள இன் நிலையில் ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் கிழக்கில் தான் உள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இம்முறை அவர்களுக்கு வாக்களித்தால் மட்டக்களப்பு மக்கள் ஒரு குற்றவாளிக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினார்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்.எனவே இலங்கை தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தால் அவர்களுடன் இணைந்து செல்லக் கூடிய இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத வன்முறைகள் அற்ற கட்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரே கட்சி தமிழரசுக் கட்சி என்ற வகையில் இம்முறை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிப்பது டன் எனது இலக்கம் 7 க்கும் தமிழரசுக் கட்சியில் உள்ள ஏனைய இருவருக்கும் என மூவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.