எதிர்காலத்தில் நவீன வசதிகளுடனான 1,000 புதிய பஸ்களை இணைப்பதன் ஊடாக பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
புறக்கோட்டை மத்திய பஸ் வளாகத்தில் நடைபெற்ற விசேட கண்காணிப்பு விஜயத்தின்போதே பிரதி அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது உள்ள 5,800 பஸ்களில் 4,500 பஸ்களை மாத்தரமே பாதைகளில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியும் என்றும், பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க 7,400 பஸ்கள் அவசியம் என்றும் புறக்கோட்டை மத்திய பஸ் வளாகத்தில் நடைபெற்ற விசேட ஆய்வின் போது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு
அவசர தீர்வுகள் வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும் எதிர்வரும் பெப்ரவரி மாத்திற்குள் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை இடம்பெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொது போக்குவரத்தை திறம்படச் செய்ய ஆயிரம் புதிய பஸ்கள் - விரைவில் ஆட்சேர்ப்பு எதிர்காலத்தில் நவீன வசதிகளுடனான 1,000 புதிய பஸ்களை இணைப்பதன் ஊடாக பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். புறக்கோட்டை மத்திய பஸ் வளாகத்தில் நடைபெற்ற விசேட கண்காணிப்பு விஜயத்தின்போதே பிரதி அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டினார்.இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது உள்ள 5,800 பஸ்களில் 4,500 பஸ்களை மாத்தரமே பாதைகளில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியும் என்றும், பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க 7,400 பஸ்கள் அவசியம் என்றும் புறக்கோட்டை மத்திய பஸ் வளாகத்தில் நடைபெற்ற விசேட ஆய்வின் போது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகள் வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.அடுத்த கட்டமாக சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும் எதிர்வரும் பெப்ரவரி மாத்திற்குள் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை இடம்பெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.