• Feb 05 2025

சிரியாவின் ஹோம்ஸ் நகரிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள்!

Tamil nila / Dec 6th 2024, 9:49 pm
image

பயங்கரவாதிகள் தலைநகர் டமஸ்கசை நோக்கி முன்னேறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில்  இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாதிகள் நேற்று வடக்கே ஹமாவைக்  கைப்பற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

 இது கடந்த வாரம் அலெப்போவின் கட்டுப்பாட்டை இழந்த ஜனாதிபதி பஷர் அல் அசாத் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இரண்டாவது பின்னடைவு என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

 கடந்த வாரம் சிரிய அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்த பயங்கரவாதிகள் தற்போது இரண்டு முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். 

 இது தவிர, அவர்கள் தெற்கிலும் முன்னேறிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 அலெப்போவிலிருந்து   தலைநகர் டமஸ்கஸ் செல்லும் வீதியில் உள்ள ஹோம்ஸ் நகரத்தை நோக்கி அவர்கள் நகர்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இதேவேளை, சிரிய இராணுவம் பல நாட்கள் சண்டையிட்ட போதிலும், ஹமா நகரத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 

 இந்த நிலையில், ஹோம்ஸ் நகரைப் பாதுகாக்க முடியுமா என்பது சந்தேகமாக உள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டுள்ள சிரிய கண்காணிப்புக் குழு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சிரியாவின் ஹோம்ஸ் நகரிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் பயங்கரவாதிகள் தலைநகர் டமஸ்கசை நோக்கி முன்னேறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில்  இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் நேற்று வடக்கே ஹமாவைக்  கைப்பற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இது கடந்த வாரம் அலெப்போவின் கட்டுப்பாட்டை இழந்த ஜனாதிபதி பஷர் அல் அசாத் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இரண்டாவது பின்னடைவு என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  கடந்த வாரம் சிரிய அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்த பயங்கரவாதிகள் தற்போது இரண்டு முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.  இது தவிர, அவர்கள் தெற்கிலும் முன்னேறிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அலெப்போவிலிருந்து   தலைநகர் டமஸ்கஸ் செல்லும் வீதியில் உள்ள ஹோம்ஸ் நகரத்தை நோக்கி அவர்கள் நகர்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதேவேளை, சிரிய இராணுவம் பல நாட்கள் சண்டையிட்ட போதிலும், ஹமா நகரத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.  இந்த நிலையில், ஹோம்ஸ் நகரைப் பாதுகாக்க முடியுமா என்பது சந்தேகமாக உள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டுள்ள சிரிய கண்காணிப்புக் குழு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement