• Mar 12 2025

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்து பாரிய பேரணி..!

Sharmi / Mar 11th 2025, 3:15 pm
image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் இன்றைய தினம் யாழில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியானது பாண்ட் வாத்திய இசையுடன் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி கிட்டுப்பூங்கா வரை நடைபவனியாக சென்றது.

பின்னர் கிட்டுப் பூங்காவில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு மகளிர் தினம் ஆரம்பமானது. இதன்போது மகளிர்களின் உரைகள் இடம்பெற்றன.

"பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கு, பாலியல் குற்றங்களை துரிதமாக விசாரிக்க நடமாடும் நீதிமன்றங்களை உருவாக்குக, பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரச புலனாய்வாளர்கள் பின் தொடர்வது, தொலைபேசியில் அழைப்பது, புகைப்படம் எடுப்பது, விசாரணை செய்வதை உடன்நிறுத்துக" என்ற வாசகங்கள் எழுதிய பதாகையை தாங்கிய வாகனமும் பேரணியில் ஈடுபட்டது. 

இதில் யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார்  மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.



சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்து பாரிய பேரணி. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் இன்றைய தினம் யாழில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த பேரணியானது பாண்ட் வாத்திய இசையுடன் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி கிட்டுப்பூங்கா வரை நடைபவனியாக சென்றது.பின்னர் கிட்டுப் பூங்காவில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு மகளிர் தினம் ஆரம்பமானது. இதன்போது மகளிர்களின் உரைகள் இடம்பெற்றன."பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கு, பாலியல் குற்றங்களை துரிதமாக விசாரிக்க நடமாடும் நீதிமன்றங்களை உருவாக்குக, பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரச புலனாய்வாளர்கள் பின் தொடர்வது, தொலைபேசியில் அழைப்பது, புகைப்படம் எடுப்பது, விசாரணை செய்வதை உடன்நிறுத்துக" என்ற வாசகங்கள் எழுதிய பதாகையை தாங்கிய வாகனமும் பேரணியில் ஈடுபட்டது. இதில் யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார்  மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement