வவுனியாவில் PickMe சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவருக்கு முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சிலரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சாரதிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் சிலர் கருத்துகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டபூர்வமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் சாரதிகளின் பாதுகாப்பும், அவர்களின் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பான காணொளிகள் வெளியானதை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சாரதியின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி, அனைத்து தரப்பினரும் அச்சமின்றி தமது தொழிலை மேற்கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வவுனியாவில் PickMe சாரதிக்கு கொலை மிரட்டல் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வவுனியாவில் PickMe சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவருக்கு முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சிலரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சாரதிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் சிலர் கருத்துகளை வெளியிட்டனர்.இந்நிலையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டபூர்வமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் சாரதிகளின் பாதுகாப்பும், அவர்களின் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.இதுதொடர்பான காணொளிகள் வெளியானதை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சாரதியின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி, அனைத்து தரப்பினரும் அச்சமின்றி தமது தொழிலை மேற்கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.