• Jan 11 2025

மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்த மூவர்!

Chithra / Dec 30th 2024, 7:38 am
image


புத்தளம் - நுரைச்சோலை, மாம்புரி பகுதியில் வீடு நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் நால்வருக்கு மின்சாரம் தாக்கியதில், அதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் சோல்டன் மற்றும் மதீனா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுரைச்சோலை – மாம்புரி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த கட்டடத்தில் இரும்பிலான பலாஞ்சு எனும் ஏணியின் மீது ஏறி, வேலை செய்து கொண்டிருந்த போதே குறித்த மூவரும் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதன்போது அங்கு 11 பேருக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்துகொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. 

குறித்த வீட்டினை நிர்மாணிப்பதற்காக அந்த வீட்டின் உரிமையாளர் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வழங்கியதுடன், அந்த ஒப்பந்தக்காரர் பல தொழிலாளர்களை ஈடுபடுத்தி அந்த வீட்டின் வேலைகளை செய்துவந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது, இரும்பில் செய்யப்பட்ட பலாஞ்சு மீது மின்சாரம் பாய்ந்ததில் அங்கு கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, அந்த இளைஞனை காப்பாற்றும் நோக்கில் அங்கிருந்த மூவர் முயற்சி செய்த போது அம்மூவரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிர் பிழைத்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்தில் மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மூவரின் சடலங்களும் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்த மூவர் புத்தளம் - நுரைச்சோலை, மாம்புரி பகுதியில் வீடு நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் நால்வருக்கு மின்சாரம் தாக்கியதில், அதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.புத்தளம் சோல்டன் மற்றும் மதீனா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நுரைச்சோலை – மாம்புரி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த கட்டடத்தில் இரும்பிலான பலாஞ்சு எனும் ஏணியின் மீது ஏறி, வேலை செய்து கொண்டிருந்த போதே குறித்த மூவரும் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இதன்போது அங்கு 11 பேருக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்துகொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. குறித்த வீட்டினை நிர்மாணிப்பதற்காக அந்த வீட்டின் உரிமையாளர் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வழங்கியதுடன், அந்த ஒப்பந்தக்காரர் பல தொழிலாளர்களை ஈடுபடுத்தி அந்த வீட்டின் வேலைகளை செய்துவந்துள்ளார்.சம்பவம் இடம்பெற்ற போது, இரும்பில் செய்யப்பட்ட பலாஞ்சு மீது மின்சாரம் பாய்ந்ததில் அங்கு கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, அந்த இளைஞனை காப்பாற்றும் நோக்கில் அங்கிருந்த மூவர் முயற்சி செய்த போது அம்மூவரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் உயிர் பிழைத்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்தில் மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த மூவரின் சடலங்களும் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement