• Apr 15 2026

சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது

Chithra / Sep 17th 2025, 1:24 pm
image

திருகோணமலை - சம்பூர் கடற்பகுதியில் டைனமைட் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகொன்றையும், மூன்று மீனவர்களை சம்பூர் பரக்கும்பா கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து இரண்டு வெடிக்காத டைனமைட்களும் கைப்பற்றப்பட்டுளௌளன.

கைது செய்யப்பட்ட மூன்று மீனவர்களில் இருவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் ஒருவர் மூதூர் பகுதியைச் சேர்ந்தவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூர் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது  கைது இடம்பெற்றுள்ளது


கைது செய்யப்பட்ட மூன்று மீனவர்களும் சம்பூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது திருகோணமலை - சம்பூர் கடற்பகுதியில் டைனமைட் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகொன்றையும், மூன்று மீனவர்களை சம்பூர் பரக்கும்பா கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.இவர்களிடமிருந்து இரண்டு வெடிக்காத டைனமைட்களும் கைப்பற்றப்பட்டுளௌளன.கைது செய்யப்பட்ட மூன்று மீனவர்களில் இருவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் ஒருவர் மூதூர் பகுதியைச் சேர்ந்தவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பூர் கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது  கைது இடம்பெற்றுள்ளதுகைது செய்யப்பட்ட மூன்று மீனவர்களும் சம்பூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement