தெதுறு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவர் விமானப்படையால் மீட்கப்பட்டுள்ளனர்.
கண்டி - மஹவ எல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் சிக்கியிருந்த மூவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Bell-212 ரக ஹெலிகொப்டர் மூலம் இந்த மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப் படையின் இரத்மலானை முகாமில் இணைக்கப்பட்டிருந்த மீட்புக் குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அசாதாரண நிலையால் பாதிப்புக்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெருக்கெடுத்த தெதுறு ஓயா; வெள்ளத்தில் சிக்கிய மூவர் விமானப் படையால் மீட்பு தெதுறு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவர் விமானப்படையால் மீட்கப்பட்டுள்ளனர். கண்டி - மஹவ எல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் சிக்கியிருந்த மூவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Bell-212 ரக ஹெலிகொப்டர் மூலம் இந்த மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை விமானப் படையின் இரத்மலானை முகாமில் இணைக்கப்பட்டிருந்த மீட்புக் குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் அசாதாரண நிலையால் பாதிப்புக்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.