• Nov 24 2024

கராத்தே போட்டியில் புத்தளத்தை சேர்ந்த மாணவர்கள் மூவர் சாதனை...!samugammedia

Anaath / Dec 20th 2023, 5:17 pm
image

வயம்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப் போட்டியில் புத்தளத்தை சேர்ந்த மாணவர்கள் மூவர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இதன்படி, 21 வயதிற்குட்பட்ட கராத்தே மற்றும் குமித்தே ஆகிய இரு போட்டிகளிலும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் ஏ.எம்.அஸாம் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

மேலும் , 14 வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில் மதுரங்குளி எக்ஸெலன்ஸ் ஆங்கில பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் யூ. தாமீர் , தங்கப் பதக்கத்தையும், புத்தளம் காஸிம் சிட்டி ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவன் மாஷின் அஹ்மத், 15 வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இந்த மாணவர்களை “டபிள்யூ.எஸ்.கே.ஏ.” கழகத்தின் கராத்தே பிரதான போதனாசிரியரான முஹம்மது சிஹான்  மற்றும் முஸ்தபா பைரூஸ் ஆகியோர் பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.

கராத்தே போட்டியில் புத்தளத்தை சேர்ந்த மாணவர்கள் மூவர் சாதனை.samugammedia வயம்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப் போட்டியில் புத்தளத்தை சேர்ந்த மாணவர்கள் மூவர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.இதன்படி, 21 வயதிற்குட்பட்ட கராத்தே மற்றும் குமித்தே ஆகிய இரு போட்டிகளிலும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் ஏ.எம்.அஸாம் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை பெற்றுள்ளார்.மேலும் , 14 வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில் மதுரங்குளி எக்ஸெலன்ஸ் ஆங்கில பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் யூ. தாமீர் , தங்கப் பதக்கத்தையும், புத்தளம் காஸிம் சிட்டி ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவன் மாஷின் அஹ்மத், 15 வயதிற்குட்பட்ட குமித்தே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.இந்த மாணவர்களை “டபிள்யூ.எஸ்.கே.ஏ.” கழகத்தின் கராத்தே பிரதான போதனாசிரியரான முஹம்மது சிஹான்  மற்றும் முஸ்தபா பைரூஸ் ஆகியோர் பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement