• Nov 24 2024

மூவாயிரம் புதிய தாதியர்கள் சேவையில்! ஓய்வு பெறும் வயதிலும் மாற்றம்..!

Chithra / May 7th 2024, 1:51 pm
image

 

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இன்று (07) பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன பதிலளிக்கையில்,

இது தொடர்பாக நீதித்துறை விவகாரம் உள்ளது. ஒரு கட்டத்தில், 61 வயது வரை நீட்டிக்க சம்மதித்தோம். அது தொடர்பாக அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்தோம். 61 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிப்பு இல்லை.

இதேவேளை, புதிதாக சுமார் 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சை நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, விரைவில் தாதியர் சேவைக்கு நியமிக்கப்பட முடியும் எனவும், தாதியர் சேவையில் தற்போது 45,000 பேர் உள்ளதாகவும், சுமார் 1,000 வெற்றிடங்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மூவாயிரம் புதிய தாதியர்கள் சேவையில் ஓய்வு பெறும் வயதிலும் மாற்றம்.  தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.இன்று (07) பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன பதிலளிக்கையில்,இது தொடர்பாக நீதித்துறை விவகாரம் உள்ளது. ஒரு கட்டத்தில், 61 வயது வரை நீட்டிக்க சம்மதித்தோம். அது தொடர்பாக அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்தோம். 61 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிப்பு இல்லை.இதேவேளை, புதிதாக சுமார் 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சை நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.இதன்படி, விரைவில் தாதியர் சேவைக்கு நியமிக்கப்பட முடியும் எனவும், தாதியர் சேவையில் தற்போது 45,000 பேர் உள்ளதாகவும், சுமார் 1,000 வெற்றிடங்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement