புத்தளத்தில் வாடகை சவாரிக்குச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவர், வடிகானுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலாவி, ரத்மல்யாய 4ம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 72 வயதுடைய ஆதம் பாவா அப்துல் லதீப் என்பவரே
இவ்வாறு கொடூரமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு முன்தினம் வீட்டில் இருந்தபோது, இனந்தெரியாத நபர் ஒருவர் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.
அவரோடு செல்வதாகத் தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்ற அப்துல் லதீப், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரது கைத்தொலைபேசிக்கு பலமுறை அழைப்பு விடுத்தும் எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து அவரது மருமகன் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று ரத்மல்யாய அடப்பனார்வில்லு வீதி வடிகானுக்குள் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அது காணாமல் போன முச்சக்கர வண்டி சாரதி என்பதை உறுதிப்படுத்தினர்.
மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்துப் பகுதியில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கிடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் அவரது முச்சக்கர வண்டி கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட பதில் நீதவான் பாரிஸ் மரிக்கார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதவான் விசாரணைகளை முன்னெடுத்தார். சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு அவர் உத்தரவிட்டார்.
தற்போது, அப்பகுதியில் உள்ள சீ.சீ.ரி.வி (CCTV) காணொளிகளின் உதவியுடன் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கருதப்படும் இக்கொலைச் சம்பவம் ரத்மல்யாய பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவாரிக்குச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி கழுத்தறுத்து படுகொலை; புத்தளத்தில் பயங்கரம் புத்தளத்தில் வாடகை சவாரிக்குச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவர், வடிகானுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாலாவி, ரத்மல்யாய 4ம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 72 வயதுடைய ஆதம் பாவா அப்துல் லதீப் என்பவரேஇவ்வாறு கொடூரமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.நேற்றிரவு முன்தினம் வீட்டில் இருந்தபோது, இனந்தெரியாத நபர் ஒருவர் முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். அவரோடு செல்வதாகத் தனது மனைவியிடம் கூறிவிட்டுச் சென்ற அப்துல் லதீப், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரது கைத்தொலைபேசிக்கு பலமுறை அழைப்பு விடுத்தும் எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது மருமகன் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று ரத்மல்யாய அடப்பனார்வில்லு வீதி வடிகானுக்குள் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அது காணாமல் போன முச்சக்கர வண்டி சாரதி என்பதை உறுதிப்படுத்தினர்.மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்துப் பகுதியில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் கிடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் அவரது முச்சக்கர வண்டி கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.புத்தளம் மாவட்ட பதில் நீதவான் பாரிஸ் மரிக்கார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதவான் விசாரணைகளை முன்னெடுத்தார். சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு அவர் உத்தரவிட்டார்.தற்போது, அப்பகுதியில் உள்ள சீ.சீ.ரி.வி (CCTV) காணொளிகளின் உதவியுடன் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கருதப்படும் இக்கொலைச் சம்பவம் ரத்மல்யாய பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.