• Feb 08 2025

கிளின் சிறிலங்கா திட்டத்தில் அதிர்ப்தியடைந்த முச்சக்கரவண்டி சாரதி

Thansita / Feb 7th 2025, 10:09 pm
image

இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கடவுள் சிலைகள் உள்ளிட்ட மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் தெரிப்பதுடன் அவற்றினை அகற்றுவதற்கு கால அவகாசமும் வழங்குகின்றனர். 

அந்தவகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்றைய தினம்(07) கிளீன் சிறீலங்கா திட்டத்தினை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் 

முன்னெடுத்திருந்தனர். இதன்போது அப்பகுதியினூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்த பொலிஸார் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றுமாறு தெரிவித்திருந்துடன் தண்ட குற்றப்பத்திரத்தையும் வழங்கியிருந்தனர் 

இதனால் அதிர்ப்தி அடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி பொலிஸாரின் முன்னிலையிலேயே குறித்த உதிரிப்பாகங்களில் காலால் அடித்து உடைத்திருந்ததுடன் ஏனைய பாகங்களையும் கழற்றி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

கிளின் சிறிலங்கா திட்டத்தில் அதிர்ப்தியடைந்த முச்சக்கரவண்டி சாரதி இலங்கை அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஓர் அங்கமாக முச்சக்கரவண்டி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கடவுள் சிலைகள் உள்ளிட்ட மேலதிக பாகங்களை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் தெரிப்பதுடன் அவற்றினை அகற்றுவதற்கு கால அவகாசமும் வழங்குகின்றனர். அந்தவகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்றைய தினம்(07) கிளீன் சிறீலங்கா திட்டத்தினை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். இதன்போது அப்பகுதியினூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்த பொலிஸார் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றுமாறு தெரிவித்திருந்துடன் தண்ட குற்றப்பத்திரத்தையும் வழங்கியிருந்தனர் இதனால் அதிர்ப்தி அடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி பொலிஸாரின் முன்னிலையிலேயே குறித்த உதிரிப்பாகங்களில் காலால் அடித்து உடைத்திருந்ததுடன் ஏனைய பாகங்களையும் கழற்றி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement