நுவரெலியாவில் மாநகரசபையால் வருடந்தோறும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வார விடுமுறையையொட்டி வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இலங்கையின் அழகை மெருகூட்டும் இடங்களில் ஒன்றாக நுவரெலியா மாவட்டம் கருதப்படுகிறது.இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
அதுவும் ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு விடுமுறை மற்றும் வசந்த காலம் கொண்டாடப்படுவதால் திரளான மக்கள் வந்து இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நுவரெலியா பிரதான நகர் கிரகரி வாவி, ஹக்கல பூங்கா, விக்டோரியா பூங்கா, உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து காணப்படுகின்றனர். மேலும் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
இயற்கை எழில் சூழ்ந்த நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவும் இதமான கால நிலையை அனுபவித்ததோடு பிரதான பூங்காக்களில் உள்ள புல் மைதானத்தில் ஓய்வெடுத்தும், அங்கு பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசித்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர் .
இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,
டித்வா புயலினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்கவும் வருவாயின்றி வெறிச்சோடிய அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பல்பொருள் வர்த்தக நிறுவனங்கள், சிறு கடைகள் என அனைத்தும் இயங்குவதால் பல்லாயிரக்கணக்கான வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள் மீண்டும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.
களைகட்டும் வசந்தகால நிகழ்வுகள் - நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவில் மாநகரசபையால் வருடந்தோறும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வார விடுமுறையையொட்டி வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.இலங்கையின் அழகை மெருகூட்டும் இடங்களில் ஒன்றாக நுவரெலியா மாவட்டம் கருதப்படுகிறது.இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதுவும் ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு விடுமுறை மற்றும் வசந்த காலம் கொண்டாடப்படுவதால் திரளான மக்கள் வந்து இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நுவரெலியா பிரதான நகர் கிரகரி வாவி, ஹக்கல பூங்கா, விக்டோரியா பூங்கா, உலக முடிவு, சீத்தாஎலிய கோவில், வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து காணப்படுகின்றனர். மேலும் பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.இயற்கை எழில் சூழ்ந்த நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவும் இதமான கால நிலையை அனுபவித்ததோடு பிரதான பூங்காக்களில் உள்ள புல் மைதானத்தில் ஓய்வெடுத்தும், அங்கு பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ண மலர்களை கண்டு ரசித்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர் .இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது,டித்வா புயலினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்கவும் வருவாயின்றி வெறிச்சோடிய அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பல்பொருள் வர்த்தக நிறுவனங்கள், சிறு கடைகள் என அனைத்தும் இயங்குவதால் பல்லாயிரக்கணக்கான வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள் மீண்டும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.