இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது எனவும்.
தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியல் சாசனத்திலே 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் நோக்கம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறுகின்ற ஒரு செயல்பாடாக அமையும்.
ஒரு அரசியல் சாசனம் வருகின்ற போது, தமிழ் தரப்பையும், ஆலோசனையும் பெற்று அதன் பின்னர் அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும்.
எங்களுக்கு இனப்பிரச்சினை இருக்கிறது.
அதற்கு தீர்வு தருகின்ற வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.
அண்மைக்காலங்களில் ஜனாதிபதி அவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டம் சம்மந்தமாக, மாகாண சபை தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில் ஜே.வி.பியின் முக்கிய செய்தியாக 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கின்ற நிலை இருக்கிறது என்தை தெட்டத் தெளிவாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையிலே எமது பார்வை என்னவென்றால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள ஒப்பந்தத்தை மீறுகின்ற வகையில் இந்தியாவை ஓரங்கட்டுகின்ற வகையில் அல்லது இந்தியாவின் ஒப்பந்தத்தை இல்லாது செய்கிற நிலை இருக்கிறதா? என்பதனை ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
எனவே அரசியல் சாசனம் எழுதப்படுகின்ற போது தமிழ் தரப்புக்களையும், தமிழ் தரப்புக்களின் ஆலோசனைகளையும் பெற்று புதிய அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது.
அதனை நிறைவேற்ற வேண்டும்.இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கை இந்தியாவிற்கும் இடையில் அழிக்க முடியாத ஒப்பந்தமாக காணப்படுகின்றது.
எனவே புதிய அரசியல் சாசனத்தை எழுதி அதனை இல்லாது ஒழிக்கும் சூழலை தற்போதைய புதிய அரசாங்கம் , ஜனாதிபதி அவர்கள் செய்ய கூடாது.
பாரிய அளவிலான மக்கள் அவரை நம்பி வாக்களித்து உள்ளனர்.
தமிழ் மக்களும் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
எனவே தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கின்ற வகையிலே புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.
அதே போல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்தச் சட்டமும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை புதிய அரசாங்கமும் ஜனாதிபதியும் செயல்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது, எனத் தெரிவித்தார்.
மேலும் மன்னார் மாவட்ட மக்கள் அதிக அளவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் சிறந்த முறையில் பணி செய்துள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.மேலும் விவசாய செய்கையும் பாரிய அளவில் அழிவடைந்துள்ளன.எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.மேலும் குறித்த மழை வெள்ளத்தினால் அரச உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அவர்களை புறம் தள்ளாது மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளமை போன்று பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக : இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நிறுத்தக் கூடாது- செல்வம் எம்.பி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது எனவும்.தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியல் சாசனத்திலே 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.இதன் நோக்கம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறுகின்ற ஒரு செயல்பாடாக அமையும்.ஒரு அரசியல் சாசனம் வருகின்ற போது, தமிழ் தரப்பையும், ஆலோசனையும் பெற்று அதன் பின்னர் அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும்.எங்களுக்கு இனப்பிரச்சினை இருக்கிறது.அதற்கு தீர்வு தருகின்ற வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.அண்மைக்காலங்களில் ஜனாதிபதி அவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டம் சம்மந்தமாக, மாகாண சபை தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில் ஜே.வி.பியின் முக்கிய செய்தியாக 13 ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கின்ற நிலை இருக்கிறது என்தை தெட்டத் தெளிவாக தெரிவித்துள்ளார்.அந்த வகையிலே எமது பார்வை என்னவென்றால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள ஒப்பந்தத்தை மீறுகின்ற வகையில் இந்தியாவை ஓரங்கட்டுகின்ற வகையில் அல்லது இந்தியாவின் ஒப்பந்தத்தை இல்லாது செய்கிற நிலை இருக்கிறதா என்பதனை ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்ளுகின்றேன்.எனவே அரசியல் சாசனம் எழுதப்படுகின்ற போது தமிழ் தரப்புக்களையும், தமிழ் தரப்புக்களின் ஆலோசனைகளையும் பெற்று புதிய அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.13 ஆவது திருத்தச் சட்டத்தை அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது.அதனை நிறைவேற்ற வேண்டும்.இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கை இந்தியாவிற்கும் இடையில் அழிக்க முடியாத ஒப்பந்தமாக காணப்படுகின்றது. எனவே புதிய அரசியல் சாசனத்தை எழுதி அதனை இல்லாது ஒழிக்கும் சூழலை தற்போதைய புதிய அரசாங்கம் , ஜனாதிபதி அவர்கள் செய்ய கூடாது. பாரிய அளவிலான மக்கள் அவரை நம்பி வாக்களித்து உள்ளனர்.தமிழ் மக்களும் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். எனவே தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கின்ற வகையிலே புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.அதே போல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்தச் சட்டமும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை புதிய அரசாங்கமும் ஜனாதிபதியும் செயல்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது, எனத் தெரிவித்தார்.மேலும் மன்னார் மாவட்ட மக்கள் அதிக அளவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகாரிகள் சிறந்த முறையில் பணி செய்துள்ளனர்.எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.மேலும் விவசாய செய்கையும் பாரிய அளவில் அழிவடைந்துள்ளன.எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.மேலும் குறித்த மழை வெள்ளத்தினால் அரச உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே அவர்களை புறம் தள்ளாது மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளமை போன்று பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.