• Dec 09 2024

இன்று இரவு பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை - பலத்த மின்னல்!

Tamil nila / Nov 1st 2024, 7:47 pm
image

ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (01) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று மாலை  வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையினால் அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இன்று இரவு பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை - பலத்த மின்னல் ஊவா, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (01) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று மாலை  வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழையினால் அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement