அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்க்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வயல் காணியொன்றில் இன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் விசேட அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பக்கோ இயந்திரத்தின் உதவியுடன் காணியில் பல மணி நேரம் மண் அகழப்பட்ட போதிலும், எந்தவித தடயப் பொருளோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருளோ கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டது.
குறித்த பகுதி கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் காணப்பட்ட பகுதியாகவும், அவர்களின் போக்குவரத்து மற்றும் நகர்வுகளுக்கான வழித்தடமாகவும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அகழ்வுப் பணிகள் இன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்றன.
சம்மாந்துறை நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், விசேட அதிரடிப்படை அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் முன்னிலையில் இருந்தனர்.
எனினும், மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடுதல் நடவடிக்கைகளின் முடிவில் எந்தவித பொருளும் மீட்கப்படாததால் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் ஆயுதங்கள், தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில் அகழ்வு - எதுவும் சிக்கவில்லை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்க்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வயல் காணியொன்றில் இன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் விசேட அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பக்கோ இயந்திரத்தின் உதவியுடன் காணியில் பல மணி நேரம் மண் அகழப்பட்ட போதிலும், எந்தவித தடயப் பொருளோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருளோ கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டது.குறித்த பகுதி கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் காணப்பட்ட பகுதியாகவும், அவர்களின் போக்குவரத்து மற்றும் நகர்வுகளுக்கான வழித்தடமாகவும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த அகழ்வுப் பணிகள் இன்று காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்றன. சம்மாந்துறை நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.மேலும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், விசேட அதிரடிப்படை அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் முன்னிலையில் இருந்தனர்.எனினும், மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடுதல் நடவடிக்கைகளின் முடிவில் எந்தவித பொருளும் மீட்கப்படாததால் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.