• Feb 27 2026

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிக்க 'முழு நாடுமே ஒன்றாக'..! ஜனாதிபதியின் திட்டத்திற்கு மக்களின் ஆதரவு

Chithra / Oct 30th 2025, 2:11 pm
image


போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.

 இந்நிலையில்  குறித்த தேசிய வேலைத்திட்டமானது திருகோணமலை - சேருநுவர பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சேருநுவர கலாச்சார மண்டபத்தில் மல்டி மீடியா மூலமாக காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சேருநுவர பிராந்திய பிரதி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.டீ.பண்டார, சேருநுவர பிரதேச சபையின் தவிசாளர் சம்பத் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இதில் சேருநுவர பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு குறித்த தேசிய நிகழ்வை மல்டி மீடியா மூலம் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.   


 


இதேவேளை 'போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ' முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு' தொடர்பில்  கல்முனை பிரதேச செயலகத்தில் உறுதி எடுத்தல் நிகழ்வு  கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன் போது  போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு தொடர்பில் பிரதேச  செயலாளரினால் உரையின் போது  தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில்  காரியாலய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 


அத்தோடு  போதைப்பொருள் அழிப்பு செயத்திட்டம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. 

டிறிபேக் கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பாடசாலை சமுகத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, பாடசாலை முன்றலில் மாணவர்கள் போதைக்கு எதிரான வாசகங்களை தாங்கியிருந்ததுடன் மாணவர்கள் சாவகச்சேரி  நகர்பகுதியில் எதிர்ப்பு பேரணியாக சென்று பாடசாலையை சென்றடைந்தனர்.

இதன் போது தென்மராட்சி பிரதேச செயலரால் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் அபாயம் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு விளக்கம் வழங்கப்பட்டது.


போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிக்க 'முழு நாடுமே ஒன்றாக'. ஜனாதிபதியின் திட்டத்திற்கு மக்களின் ஆதரவு போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.இந்த நிகழ்வானது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. இந்நிலையில்  குறித்த தேசிய வேலைத்திட்டமானது திருகோணமலை - சேருநுவர பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சேருநுவர கலாச்சார மண்டபத்தில் மல்டி மீடியா மூலமாக காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் சேருநுவர பிராந்திய பிரதி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.டீ.பண்டார, சேருநுவர பிரதேச சபையின் தவிசாளர் சம்பத் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.இதில் சேருநுவர பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு குறித்த தேசிய நிகழ்வை மல்டி மீடியா மூலம் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.    இதேவேளை 'போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ' முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு' தொடர்பில்  கல்முனை பிரதேச செயலகத்தில் உறுதி எடுத்தல் நிகழ்வு  கல்முனை பிரதேச செயலாளர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் இன்று நடைபெற்றது.இதன் போது  போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு தொடர்பில் பிரதேச  செயலாளரினால் உரையின் போது  தெளிவுபடுத்தப்பட்டது.இந்நிகழ்வில்  காரியாலய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு  போதைப்பொருள் அழிப்பு செயத்திட்டம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. டிறிபேக் கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பாடசாலை சமுகத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது, பாடசாலை முன்றலில் மாணவர்கள் போதைக்கு எதிரான வாசகங்களை தாங்கியிருந்ததுடன் மாணவர்கள் சாவகச்சேரி  நகர்பகுதியில் எதிர்ப்பு பேரணியாக சென்று பாடசாலையை சென்றடைந்தனர்.இதன் போது தென்மராட்சி பிரதேச செயலரால் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் அபாயம் தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு விளக்கம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement