• Oct 31 2024

ரவிராஜ் மற்றும் தென்மராட்சி மக்களைக் கௌரவப்படுத்தவே : சசிகலாவுக்கு ரெலோ ஆசனம் வழங்கியது -.சுரேன்

Tharmini / Oct 31st 2024, 2:19 pm
image

Advertisement

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு தமிழீழ  விடுதலை இயக்கம் ( ரெலோ) ஆசனம் வழங்கியது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். 

நேற்று முன்தினம் (29)  ஆனைக்கோட்டை பகுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக செயல்படுவதில் முன் நின்று உழைத்தவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பங்காளி கட்சிகளாக ரெலோ பயணித்த போது எங்கள் கட்சியின் தலைவர் உடன் நெருங்கிய உறவை பேணியதுடன் தமிழ் மக்கள் சார்ந்து தீர்வு விடயங்களில் நெருக்கமாக செயல்பட்டவர். 

அவ்வாறான ஒருவரின் மனைவியான சசிகலா ரவி ராஜ் கடந்த  பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்து வேட்பாளராக களம் இறக்கப்பட்ட நிலையில் அவரின் வெற்றி உறுதியாக இருந்த நிலையில் சதி நடவடிக்கை மூலம் அவரது ஆசனம் பறிக்கப்பட்டது. 

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் சசிகலா ரவிராஜ்க்கு தமிழரசு கட்சி ஆசன ஒதுக்கீட்டை வழங்காமல் புறம் தள்ளிய  நிலையில் மாமனிதர் ரவிராஜ்சுக்காகவும் அவர் நம்பிக்கை வைத்த தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் அவரை எம்மோடு இணைத்தோம்.

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ யாழ் தேர்தல் தொகுதியில் ஆசன ஒதுக்கீட்டினை பகிரும் போது போட்டி நிலை உருவாகிய போதும் சசிகலாவுக்கு கட்டாயம் ஆசனத்தை வழங்க வேண்டும் என கட்சி முடிவு செய்து என்னோடு சக வேட்பாளராக களம் இறக்கினோம். 

தமிழ் தேசியத்திற்காக மாமனிதர் ரவிராஜ் செய்த தியாகங்கள் அளப்பரியது அதனை தமிழ் மக்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். 

எமது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியானது தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கூட்டணி கட்சிகளில் முதன்மையான கட்சியாகப் பார்க்கப்படுகின்ற நிலையில் அதனை தமிழ் மக்கள் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்

ஆகவே மறைந்த மாமனிதரின் தியாகங்களை நெஞ்சில் நிறுத்தி சங்கு சின்னத்தில் போட்டியிடும் எனது இலக்கமான 3 க்கும் பெண் வேட்பாளரான சசிகலாவின் இலக்கம் 7 க்கும் விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ரவிராஜ் மற்றும் தென்மராட்சி மக்களைக் கௌரவப்படுத்தவே : சசிகலாவுக்கு ரெலோ ஆசனம் வழங்கியது -.சுரேன் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சையும் தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்தவே சசிகலாவுக்கு தமிழீழ  விடுதலை இயக்கம் ( ரெலோ) ஆசனம் வழங்கியது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (29)  ஆனைக்கோட்டை பகுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக செயல்படுவதில் முன் நின்று உழைத்தவர்.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பங்காளி கட்சிகளாக ரெலோ பயணித்த போது எங்கள் கட்சியின் தலைவர் உடன் நெருங்கிய உறவை பேணியதுடன் தமிழ் மக்கள் சார்ந்து தீர்வு விடயங்களில் நெருக்கமாக செயல்பட்டவர். அவ்வாறான ஒருவரின் மனைவியான சசிகலா ரவி ராஜ் கடந்த  பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்து வேட்பாளராக களம் இறக்கப்பட்ட நிலையில் அவரின் வெற்றி உறுதியாக இருந்த நிலையில் சதி நடவடிக்கை மூலம் அவரது ஆசனம் பறிக்கப்பட்டது. இம்முறை பாராளுமன்ற தேர்தலில் சசிகலா ரவிராஜ்க்கு தமிழரசு கட்சி ஆசன ஒதுக்கீட்டை வழங்காமல் புறம் தள்ளிய  நிலையில் மாமனிதர் ரவிராஜ்சுக்காகவும் அவர் நம்பிக்கை வைத்த தென்மராட்சி மக்களையும் கௌரவப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் அவரை எம்மோடு இணைத்தோம்.தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ யாழ் தேர்தல் தொகுதியில் ஆசன ஒதுக்கீட்டினை பகிரும் போது போட்டி நிலை உருவாகிய போதும் சசிகலாவுக்கு கட்டாயம் ஆசனத்தை வழங்க வேண்டும் என கட்சி முடிவு செய்து என்னோடு சக வேட்பாளராக களம் இறக்கினோம். தமிழ் தேசியத்திற்காக மாமனிதர் ரவிராஜ் செய்த தியாகங்கள் அளப்பரியது அதனை தமிழ் மக்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். எமது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியானது தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கின்ற கூட்டணி கட்சிகளில் முதன்மையான கட்சியாகப் பார்க்கப்படுகின்ற நிலையில் அதனை தமிழ் மக்கள் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்ஆகவே மறைந்த மாமனிதரின் தியாகங்களை நெஞ்சில் நிறுத்தி சங்கு சின்னத்தில் போட்டியிடும் எனது இலக்கமான 3 க்கும் பெண் வேட்பாளரான சசிகலாவின் இலக்கம் 7 க்கும் விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement