• Apr 20 2026

இன்று பலத்த மின்னலுடன் மழை - இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை

Chithra / Apr 20th 2026, 1:24 pm
image

இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் இன்று (20) கடுமையான மின்னல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. 


நாட்டில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


இன்று 12 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும்.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 


அவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும்;, குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


அதேநேரம், கடல் பிராந்தியங்களில் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை   வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர்  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


அதனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


இன்று பலத்த மின்னலுடன் மழை - இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் இன்று (20) கடுமையான மின்னல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. நாட்டில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று 12 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும்;, குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.அதேநேரம், கடல் பிராந்தியங்களில் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை   வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர்  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.அதனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement