• Nov 23 2024

mathuri / Jan 14th 2024, 6:55 am
image

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து குறைவடையும் என வளிமண்டலவியல் திணைகள் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்பதோடு ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என அந்த திணைக்களத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.samugammedia வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து குறைவடையும் என வளிமண்டலவியல் திணைகள் எதிர்வுகூறியுள்ளது.இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்பதோடு ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என அந்த திணைக்களத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement