கொழும்பு அதன் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால் அழகாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நகரத்தை மிக அழகான நகரமாக மாற்றுவோம். அந்த நோக்கத்துடன், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள தெமட்டகொட, கொட்டாஞ்சேனை, மருதானை மற்றும் கொம்பனியவீதி ஆகிய இடங்களில் திங்கட்கிழமை (28) திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
கொழும்பு மாநகர சபையின் வருடாந்த வருமானம் 30 பில்லியன் ரூபாவாகும். கொழும்பில் ஒரு வசதிபடைத்த நகரசபை உள்ளது. இந்த நகர சபையில் என்ன குறைவு? இந்தப் பகுதிகளை எவ்வளவு முன்னேற்ற முடியும்? மக்கள் பற்றிய எந்த உணர்வும் இல்லை.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய எந்த்த் தேவையும் இல்லை. நாம் இதைச் சொன்னாலும், நாம் எதுவும் செய்ய முடியாது.
கொழும்பு மாநகர சபையைப் பற்றி நாம் நினைக்கும் போது, பொதுவாக ஒரு பெரும் திருட்டுக்கள் நிறைந்த இடம் பற்றித்தான் எமக்கு நினைவுக்கு வரும். நகர சபையைப் பற்றிய நமது பிம்பம் என்னவென்றால், அது பணத்தை வீணடிக்கிற, நம்மை இங்கும் அங்கும் அலையச் செய்கிற, எதையும் செய்து முடிக்க இயலாத ஒரு இடம்.
இந்த நிலை மாற வேண்டும். இந்த நாட்டை மாற்றும் பயணத்தை இந்த நாட்டு மக்கள் 2024 ஆம் ஆண்டு தொடங்கினர். இந்த நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்த இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்.
அதன் மூலம், இப்போது அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் எம்மிடம் உள்ளது. உங்கள் அனைவரின் குரலையும், உங்கள் அனைவரின் தேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் எங்களிடம் உள்ளது.
உங்களுக்கு நினைவிருக்கலாம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தேர்தல் 2023 இல் நடத்தப்படவிருந்தது. நாங்கள் கீழிருந்து ஆரம்பிக்கலாம் என்று சொன்னோம்.
ஆனால் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க என்ன செய்தார்? தேர்தலை இல்லாமல் செய்தார். வழக்கு தாக்கல் செய்தே இந்தத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி பெற்றது. வழக்குகள் மூலமே எங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடிந்தது.
அதனால்தான் இந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் இரண்டு ஆண்டுகள் தாமதமாக வந்தாலும், அவற்றை நடத்தும் வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது. 2024 இல் நீங்கள் தொடங்கிய வரலாற்றுப் பயணத்தை நாங்கள் நகர சபை வரை எடுத்துச் செல்வோம்.
எதிர்கட்சிகள் எங்களைப் பற்றி பல விடயங்களையும் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் திருடுகிறோம் என்று அவர்களால் சொல்ல முடியாது.
நாங்கள் மக்களின் பணத்தைப் பாதுகாக்கிறோம். தோழர் அனுர குமார வெற்றி பெற்ற நாளிலிருந்து, ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் காட்டி வருகிறோம்.
இந்த முகங்களைப் பார்க்கும் போது நாம் என்ன சொல்ல முடியும்? மே 6 ஆம் திகதி கொழும்பு நகரை தேசிய மக்கள் சக்தி வெல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எமது சகோதரி விரோய் மேயராக தெரிவாவார். அதை மறுபடியும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த நகரத்தில் உங்களை நன்கு அறிந்த ஒரு மேயர் இப்போது உங்களிடம் இருக்கிறார், அவரை நீங்கள் அணுகி பேசலாம். அவர் திறமையான ஒரு குழுவுடன் மேயராகப் போகிறார்.
நாம் உண்மையிலேயே பெருமைப்படும் வகையில் இந்த நகரத்தை அபிவிருத்தி செய்து அழகுபடுத்த வேண்டும் என்ற மிகுந்த ஆசை அவருக்கு இருக்கிறது.
உங்கள் எல்லாருக்கும் கனவுகள் உள்ளதென்பது எனக்குத் தெரியும். இங்குள்ள இந்தப் பிள்ளைகள், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைக் கொண்டுள்ளனர்.
எமது கல்வி முறையை நாம் சரிசெய்ய வேண்டும். நாங்கள் முன்பள்ளியை நகர சபையிடம் ஒப்படைத்தது போலவே, நாட்டில் கல்வியை தேசிய அளவில் கட்டியெழுப்ப பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான ஒரு பெரிய தேவை இருக்கிறது.
எல்லா பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்ல விரும்பும் வகையில் பாடசாலையை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். பிள்ளைகளுக்கு சுமையாக இல்லாத வகையில், பெற்றோருக்கு சுமையாக இல்லாத வகையில், பிள்ளைகள் விருப்பத்துடன் கற்கும் வகையில் கல்வி மாற்றப்பட வேண்டும்.
பாடசாலைக்குச் சென்று புத்தகங்களுக்குள் மட்டும் இருந்து பரீட்சைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுவதை விட, கல்வியின் மூலம் உலகை எவ்வாறு திறந்து விரிவுபடுத்துவது என்பதை நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.
கொழும்பு நகரம் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம். இந்தப் பகுதி இன்னும் தனித்துவமான ஒன்றையும் கொண்டுள்ளது. நான் இங்கு வந்தபோது, ஒரு அழகான கோவிலைக் கடந்து சென்றேன்.
எதிரே ஒரு புத்தர் சிலை. இங்கு அன்மை மரியாளின் சிலை உள்ளது. பள்ளிவாயல் வெகு தொலைவில் இல்லை. இந்தப் பன்முகத்தன்மை எமக்கு மதிப்பைக் கொண்டுவருகிறது.
இது ஒரு சிறிய இடத்தில் அமைந்திருந்தாலும், ஒருவருக்கொருவர் புரிதலையும் உணர்வுகளையும் அதிகரிக்கும் இடமாகும். அருகிலுள்ள கடைக்குச் சென்றாலும் சுவையான உணவு கிடைக்கும். அந்த சுவை வேறு எங்கும் கிடைக்காது.
நாங்கள் சுற்றுலா பற்றி பேசுகிறோம். எமது சுற்றுலாத் துறை பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இவற்றைப் பார்க்க வேண்டும்.
இந்த அனுபவம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அவை அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும். இங்கு வருவதற்கான உணர்வை ஏற்படுத்தும் வகையில் அதைக் கட்டமைக்க வேண்டும்.
இந்த விடயங்களுக்காக நாம் இந்த நகரத்தைப் பிரபலப்படுத்த வேண்டும். கொழும்பு வெறும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் பற்றியது மட்டுமல்ல, அது மிகவும் வளமான மற்றும் அழகான கலாச்சாரத்தைக் கொண்ட பன்முகத்தன்மை நிறைந்த நகரம் என்பதையும் நாம் முழு உலகிற்கும் காட்ட வேண்டும்.
புதிய கல்வி முறையுடன் நாங்கள் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்ற நீங்கள் எங்களுக்கு பெரும் பலத்தை அளித்தீர்கள்.
நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் உங்களுடன் கலந்துரையாடிய அனைத்து விடயங்களையும், உங்களுடன் நாங்கள் செய்த சமூக ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளையும் செயற்படுத்துவதற்காகவே நாம் அதிகாரத்தைப் பெற்றோம்.
அதை செயற்படுத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அந்த செயன்முறையை மேற்கொள்ள ஒரு நல்ல நகர சபையை உருவாக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட எங்கள் முதலாவது வரவுசெலவுத்திட்டதில், பாலர் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. வீதிகள் அமைக்க பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் முகாமைத்துவம், கழிவு மற்றும் வடிகால் அமைப்புகளை நிர்மாணிப்பதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும், உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வரும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அவற்றுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான ஏற்பாடுகளை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.
அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள அந்தப் பணம், பல தியாகங்கள் மூலம் மக்களுக்காகச் சேகரிக்கப்பட்ட பணம், நாம் அவற்றை திருடர்களிடம் ஒப்படைக்க முடியாது. அதைச் செய்ய முடியாது. அதனால்தான் நகர சபையை தூய்மைப்படுத்த வேண்டும். எங்களுக்கு செய்வதறுக்கு நிறைய பணிகள் உள்ளன.
நாங்கள் அதிகாரத்திற்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது, இன்னும் நிறைய வேலைகள் மீதமுள்ளன பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது என்று நாங்கள் இப்போது கூறுகிறோம். அடுத்து, நாம் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும்.
குறிப்பாக இளைஞர்கள் யுவதிகளுக்கு, பெண்களுக்கு சுயதொழில்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை முறையாக செயற்படுத்தக்கூடிய நம்பகமானவர்களை உருவாக்குவது முக்கியம்.
அவற்றை செயற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதனால்தான் இங்குள்ளர்களைப் போன்ற திறமையான குழுவை நகர சபைக்கு தெரிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, ஹேமந்த விஜேகோன், கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் விரோய் கெலீ பல்தசார் மற்றும் வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாம் அனைவரும் ஒன்று இணைந்து கொழும்பு நகரத்தை அழகாக மாற்றுவோம் - பிரதமர் ஹரிணி கொழும்பு அதன் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மையால் அழகாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நகரத்தை மிக அழகான நகரமாக மாற்றுவோம். அந்த நோக்கத்துடன், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.கொழும்பு மாவட்டத்தில் உள்ள தெமட்டகொட, கொட்டாஞ்சேனை, மருதானை மற்றும் கொம்பனியவீதி ஆகிய இடங்களில் திங்கட்கிழமை (28) திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,கொழும்பு மாநகர சபையின் வருடாந்த வருமானம் 30 பில்லியன் ரூபாவாகும். கொழும்பில் ஒரு வசதிபடைத்த நகரசபை உள்ளது. இந்த நகர சபையில் என்ன குறைவு இந்தப் பகுதிகளை எவ்வளவு முன்னேற்ற முடியும் மக்கள் பற்றிய எந்த உணர்வும் இல்லை. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய எந்த்த் தேவையும் இல்லை. நாம் இதைச் சொன்னாலும், நாம் எதுவும் செய்ய முடியாது. கொழும்பு மாநகர சபையைப் பற்றி நாம் நினைக்கும் போது, பொதுவாக ஒரு பெரும் திருட்டுக்கள் நிறைந்த இடம் பற்றித்தான் எமக்கு நினைவுக்கு வரும். நகர சபையைப் பற்றிய நமது பிம்பம் என்னவென்றால், அது பணத்தை வீணடிக்கிற, நம்மை இங்கும் அங்கும் அலையச் செய்கிற, எதையும் செய்து முடிக்க இயலாத ஒரு இடம். இந்த நிலை மாற வேண்டும். இந்த நாட்டை மாற்றும் பயணத்தை இந்த நாட்டு மக்கள் 2024 ஆம் ஆண்டு தொடங்கினர். இந்த நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்த இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல். அதன் மூலம், இப்போது அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் எம்மிடம் உள்ளது. உங்கள் அனைவரின் குரலையும், உங்கள் அனைவரின் தேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் எங்களிடம் உள்ளது.உங்களுக்கு நினைவிருக்கலாம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தேர்தல் 2023 இல் நடத்தப்படவிருந்தது. நாங்கள் கீழிருந்து ஆரம்பிக்கலாம் என்று சொன்னோம்.ஆனால் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க என்ன செய்தார் தேர்தலை இல்லாமல் செய்தார். வழக்கு தாக்கல் செய்தே இந்தத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி பெற்றது. வழக்குகள் மூலமே எங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடிந்தது. அதனால்தான் இந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் இரண்டு ஆண்டுகள் தாமதமாக வந்தாலும், அவற்றை நடத்தும் வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது. 2024 இல் நீங்கள் தொடங்கிய வரலாற்றுப் பயணத்தை நாங்கள் நகர சபை வரை எடுத்துச் செல்வோம்.எதிர்கட்சிகள் எங்களைப் பற்றி பல விடயங்களையும் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் திருடுகிறோம் என்று அவர்களால் சொல்ல முடியாது. நாங்கள் மக்களின் பணத்தைப் பாதுகாக்கிறோம். தோழர் அனுர குமார வெற்றி பெற்ற நாளிலிருந்து, ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் காட்டி வருகிறோம்.இந்த முகங்களைப் பார்க்கும் போது நாம் என்ன சொல்ல முடியும் மே 6 ஆம் திகதி கொழும்பு நகரை தேசிய மக்கள் சக்தி வெல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.எமது சகோதரி விரோய் மேயராக தெரிவாவார். அதை மறுபடியும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த நகரத்தில் உங்களை நன்கு அறிந்த ஒரு மேயர் இப்போது உங்களிடம் இருக்கிறார், அவரை நீங்கள் அணுகி பேசலாம். அவர் திறமையான ஒரு குழுவுடன் மேயராகப் போகிறார்.நாம் உண்மையிலேயே பெருமைப்படும் வகையில் இந்த நகரத்தை அபிவிருத்தி செய்து அழகுபடுத்த வேண்டும் என்ற மிகுந்த ஆசை அவருக்கு இருக்கிறது.உங்கள் எல்லாருக்கும் கனவுகள் உள்ளதென்பது எனக்குத் தெரியும். இங்குள்ள இந்தப் பிள்ளைகள், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைக் கொண்டுள்ளனர்.எமது கல்வி முறையை நாம் சரிசெய்ய வேண்டும். நாங்கள் முன்பள்ளியை நகர சபையிடம் ஒப்படைத்தது போலவே, நாட்டில் கல்வியை தேசிய அளவில் கட்டியெழுப்ப பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான ஒரு பெரிய தேவை இருக்கிறது.எல்லா பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்ல விரும்பும் வகையில் பாடசாலையை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். பிள்ளைகளுக்கு சுமையாக இல்லாத வகையில், பெற்றோருக்கு சுமையாக இல்லாத வகையில், பிள்ளைகள் விருப்பத்துடன் கற்கும் வகையில் கல்வி மாற்றப்பட வேண்டும்.பாடசாலைக்குச் சென்று புத்தகங்களுக்குள் மட்டும் இருந்து பரீட்சைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுவதை விட, கல்வியின் மூலம் உலகை எவ்வாறு திறந்து விரிவுபடுத்துவது என்பதை நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.கொழும்பு நகரம் மிகவும் சிறப்பு வாய்ந்த இடம். இந்தப் பகுதி இன்னும் தனித்துவமான ஒன்றையும் கொண்டுள்ளது. நான் இங்கு வந்தபோது, ஒரு அழகான கோவிலைக் கடந்து சென்றேன். எதிரே ஒரு புத்தர் சிலை. இங்கு அன்மை மரியாளின் சிலை உள்ளது. பள்ளிவாயல் வெகு தொலைவில் இல்லை. இந்தப் பன்முகத்தன்மை எமக்கு மதிப்பைக் கொண்டுவருகிறது.இது ஒரு சிறிய இடத்தில் அமைந்திருந்தாலும், ஒருவருக்கொருவர் புரிதலையும் உணர்வுகளையும் அதிகரிக்கும் இடமாகும். அருகிலுள்ள கடைக்குச் சென்றாலும் சுவையான உணவு கிடைக்கும். அந்த சுவை வேறு எங்கும் கிடைக்காது.நாங்கள் சுற்றுலா பற்றி பேசுகிறோம். எமது சுற்றுலாத் துறை பிரச்சாரத்தின் போது வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இவற்றைப் பார்க்க வேண்டும்.இந்த அனுபவம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அவை அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும். இங்கு வருவதற்கான உணர்வை ஏற்படுத்தும் வகையில் அதைக் கட்டமைக்க வேண்டும்.இந்த விடயங்களுக்காக நாம் இந்த நகரத்தைப் பிரபலப்படுத்த வேண்டும். கொழும்பு வெறும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் பற்றியது மட்டுமல்ல, அது மிகவும் வளமான மற்றும் அழகான கலாச்சாரத்தைக் கொண்ட பன்முகத்தன்மை நிறைந்த நகரம் என்பதையும் நாம் முழு உலகிற்கும் காட்ட வேண்டும்.புதிய கல்வி முறையுடன் நாங்கள் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்ற நீங்கள் எங்களுக்கு பெரும் பலத்தை அளித்தீர்கள். நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் உங்களுடன் கலந்துரையாடிய அனைத்து விடயங்களையும், உங்களுடன் நாங்கள் செய்த சமூக ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளையும் செயற்படுத்துவதற்காகவே நாம் அதிகாரத்தைப் பெற்றோம். அதை செயற்படுத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அந்த செயன்முறையை மேற்கொள்ள ஒரு நல்ல நகர சபையை உருவாக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.இந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட எங்கள் முதலாவது வரவுசெலவுத்திட்டதில், பாலர் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. வீதிகள் அமைக்க பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் முகாமைத்துவம், கழிவு மற்றும் வடிகால் அமைப்புகளை நிர்மாணிப்பதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும், உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வரும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அவற்றுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான ஏற்பாடுகளை நாங்கள் ஒதுக்கியுள்ளோம். அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள அந்தப் பணம், பல தியாகங்கள் மூலம் மக்களுக்காகச் சேகரிக்கப்பட்ட பணம், நாம் அவற்றை திருடர்களிடம் ஒப்படைக்க முடியாது. அதைச் செய்ய முடியாது. அதனால்தான் நகர சபையை தூய்மைப்படுத்த வேண்டும். எங்களுக்கு செய்வதறுக்கு நிறைய பணிகள் உள்ளன. நாங்கள் அதிகாரத்திற்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது, இன்னும் நிறைய வேலைகள் மீதமுள்ளன பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது என்று நாங்கள் இப்போது கூறுகிறோம். அடுத்து, நாம் பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் யுவதிகளுக்கு, பெண்களுக்கு சுயதொழில்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை முறையாக செயற்படுத்தக்கூடிய நம்பகமானவர்களை உருவாக்குவது முக்கியம்.அவற்றை செயற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதனால்தான் இங்குள்ளர்களைப் போன்ற திறமையான குழுவை நகர சபைக்கு தெரிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, ஹேமந்த விஜேகோன், கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் விரோய் கெலீ பல்தசார் மற்றும் வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.