வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் உள்ளுராட்சிமன்ற வேட்பாளர்களுக்கான கூட்டமானது கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
வவுனியா, ஓவியா விருந்தினர் விடுதியில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.மயூரதன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வடக்கு - கிழக்கு பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான முதலாவது கூட்டமாக இக் கூட்டம் அமைந்திருந்தது.
இதில், வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதே சபை என்பவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களான கட்சியின பெதுச் செயலாளர் தலதா அத்துகோரளை, தவிசாளர் வஜிர அபயவர்த்தன, கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதம் தொடர்பாகவும், கட்சியின் செயற்திட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களுடன் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கலந்துரையாடல் வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் உள்ளுராட்சிமன்ற வேட்பாளர்களுக்கான கூட்டமானது கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.வவுனியா, ஓவியா விருந்தினர் விடுதியில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.மயூரதன் தலைமையில் இன்று இடம்பெற்றது.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வடக்கு - கிழக்கு பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான முதலாவது கூட்டமாக இக் கூட்டம் அமைந்திருந்தது.இதில், வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதே சபை என்பவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களான கட்சியின பெதுச் செயலாளர் தலதா அத்துகோரளை, தவிசாளர் வஜிர அபயவர்த்தன, கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதம் தொடர்பாகவும், கட்சியின் செயற்திட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர்.