• Aug 18 2025

1.5 மில்லியனைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை; ஓகஸ்ட் இன்று வரை 150,000 பயணிகள்!

shanuja / Aug 18th 2025, 4:31 pm
image

2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவரை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் உள்ளதாவது, 


2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவரை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது. 


சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பங்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 


அழகு, கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் நிறைந்த இலங்கையை பார்வையிட சகலரையும் அழைப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்  தனது பதிவில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 


இதனிடையே, இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 150,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.


சுற்றுலாப் பயணிகளின் இந்த வருகை சுற்றுலாத்துறையை மென்மேலும் மேம்படுத்துவதாக அமைகின்றது.

1.5 மில்லியனைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை; ஓகஸ்ட் இன்று வரை 150,000 பயணிகள் 2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவரை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் உள்ளதாவது, 2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவரை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பங்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அழகு, கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் நிறைந்த இலங்கையை பார்வையிட சகலரையும் அழைப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்  தனது பதிவில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 150,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.சுற்றுலாப் பயணிகளின் இந்த வருகை சுற்றுலாத்துறையை மென்மேலும் மேம்படுத்துவதாக அமைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement