• Nov 22 2024

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகளால் விருந்தகங்கள் எதிர்நோக்கும் சிக்கல்..!

Chithra / Feb 25th 2024, 8:58 am
image

 

இலங்கையில் உள்ள நட்சத்திர விருந்தகங்களில் பணியாளர்களுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான உணவு மற்றும் சேவைகளை வழங்குவதில் விருந்தக நிர்வாகங்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ சேவை தொடக்கம் சமையல் அறை வரை அனைத்து திணைக்களங்களிலும் பணியாளர் வெற்றிடங்கள் உள்ளன.

தகுதியான பணியாளர்கள் விண்ணப்பிக்காத காரணத்தினால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை எனவும் சம்பந்தப்பட்ட விருந்தக நிர்வாகங்கள் இலங்கை முதலீட்டுச் சபைக்கு அறிவித்துள்ளன.

நட்சத்திர விருந்தக பணியாளர் தரத்திற்கு பயிற்சி பெற்ற பலர் வெளிநாட்டு விருந்தகங்களில் தொழில்வாய்ப்பை பெற்று வெளியேறியதாலும், விருந்தக பயிற்சி பெற்ற பலர் வெளிநாட்டு விடுதிகள் மற்றும் விருந்தகங்களில் தொழில் தேடுவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு தீர்வாக, விருந்தக சேவையில் பயிற்சி பெற்ற இளைஞர்களை விரைவில் நட்சத்திர விருந்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகளால் விருந்தகங்கள் எதிர்நோக்கும் சிக்கல்.  இலங்கையில் உள்ள நட்சத்திர விருந்தகங்களில் பணியாளர்களுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான உணவு மற்றும் சேவைகளை வழங்குவதில் விருந்தக நிர்வாகங்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முகாமைத்துவ சேவை தொடக்கம் சமையல் அறை வரை அனைத்து திணைக்களங்களிலும் பணியாளர் வெற்றிடங்கள் உள்ளன.தகுதியான பணியாளர்கள் விண்ணப்பிக்காத காரணத்தினால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை எனவும் சம்பந்தப்பட்ட விருந்தக நிர்வாகங்கள் இலங்கை முதலீட்டுச் சபைக்கு அறிவித்துள்ளன.நட்சத்திர விருந்தக பணியாளர் தரத்திற்கு பயிற்சி பெற்ற பலர் வெளிநாட்டு விருந்தகங்களில் தொழில்வாய்ப்பை பெற்று வெளியேறியதாலும், விருந்தக பயிற்சி பெற்ற பலர் வெளிநாட்டு விடுதிகள் மற்றும் விருந்தகங்களில் தொழில் தேடுவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு தீர்வாக, விருந்தக சேவையில் பயிற்சி பெற்ற இளைஞர்களை விரைவில் நட்சத்திர விருந்தகங்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement