• Mar 16 2026

மின்கம்பம் விழுந்து உழவியந்திரம் விபத்து -மயிரிழையில் தப்பிய சாரதி!

shanu / Jun 21st 2025, 6:10 pm
image

வட்டுக்கோட்டை - அராலி மத்தி பகுதியில் உழவியந்திரம் ஒன்று  மின்கம்பத்துடன் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.  



குறித்த பகுதியில் வர்த்தக ஸ்தாபனம் ஒன்றுக்குச் சொந்தமான உழவியந்திரம்  வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளது. 


அதன்போது வீதியால் சென்ற மாடு குறுக்கே பாய்ந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம்  வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி  விபத்துக்குள்ளாகியது. 


விபத்தில் மின்கம்பம் முறிந்து உழவு இயந்திரத்தின் மீது விழுந்தது. எனினும் உழவியந்திர சாரதி எந்தவிதமான காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.


விபத்தின்போது சேதம் ஏற்பட்ட மின்சார இணைப்பினை சரிசெய்யும் நடவடிக்கையில் வட்டுக்கோட்டை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்கம்பம் விழுந்து உழவியந்திரம் விபத்து -மயிரிழையில் தப்பிய சாரதி வட்டுக்கோட்டை - அராலி மத்தி பகுதியில் உழவியந்திரம் ஒன்று  மின்கம்பத்துடன் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.  குறித்த பகுதியில் வர்த்தக ஸ்தாபனம் ஒன்றுக்குச் சொந்தமான உழவியந்திரம்  வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளது. அதன்போது வீதியால் சென்ற மாடு குறுக்கே பாய்ந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம்  வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி  விபத்துக்குள்ளாகியது. விபத்தில் மின்கம்பம் முறிந்து உழவு இயந்திரத்தின் மீது விழுந்தது. எனினும் உழவியந்திர சாரதி எந்தவிதமான காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.விபத்தின்போது சேதம் ஏற்பட்ட மின்சார இணைப்பினை சரிசெய்யும் நடவடிக்கையில் வட்டுக்கோட்டை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement