• May 01 2026

கட்டுநாயக்கவில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது

Chithra / Jan 21st 2026, 7:59 am
image

 

​கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, மருதானை பகுதியைச் சேர்ந்த உணவு விநியோகத் தொழிலில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​சந்தேகநபர் மலேசியாவில் இந்தப் போதைப்பொருளைக் கொள்வனவு செய்து, அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்திலிருந்து அவர் வெளியேற முயன்ற போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் அவரது கைப்பையில் (Hand Luggage) மூன்று பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.24 கிலோ கிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

​கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையையும் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டுநாயக்கவில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது  ​கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு, மருதானை பகுதியைச் சேர்ந்த உணவு விநியோகத் தொழிலில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​சந்தேகநபர் மலேசியாவில் இந்தப் போதைப்பொருளைக் கொள்வனவு செய்து, அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.விமான நிலையத்திலிருந்து அவர் வெளியேற முயன்ற போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் அவரது கைப்பையில் (Hand Luggage) மூன்று பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.24 கிலோ கிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.​கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையையும் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement