• May 13 2026

பரந்தன் வர்த்தக நிலையங்கள், சந்தை கட்டடத் தொகுதிகள் புனரமைக்க வியாபாரிகள் கோரிக்கை!

Ziya / May 12th 2026, 4:01 pm
image

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதிகள் கடந்த 30 .04.2026 அன்றைய தினம் வீசிய மினி சூறாவளி காற்றின் காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதியின் கூரை முற்றும் முழுதாக காற்றினில் தூக்கி வீசப்பட்டு பாதிப்புக்குள்ளானவை குறிப்பிடத்தக்க விடயமாகும் .

அன்று தொடக்கம் இன்று வரை சிறக்க காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக குறித்த பரந்தன் வர்த்தக சந்தையின் கூரை வேலைகள் இதுவரையில் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் இங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் காய்கறி வியாபாரிகள் நாளாந்தம் மழையில் தமது காய்கறிகளை நனைத்து மீண்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் .

வியாபாரம் செய்வதற்கு கூட கூரை இல்லாமல் மழையில் நனைந்த வண்ணம் தொடர்ச்சியாக வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தை பாதுகாப்பு இன்மை காரணமாக நுகர்வோரும் காய்கறிகள் கொள்வனவு செய்வதற்கு இப்பகுதிகளுக்கு வருவது குறைந்து காணப்படுவதன் காரணமாக மிகவும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாகவும் இங்கு வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வரும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு எமது வாழ்வாதாரத்தை தொடர்ந்து இப்பகுதியில் மேற்கொள்வதற்கு  மிக விரைவில் கட்டடத் தொகுதியை புனரமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தெரிவித்தனர்

பரந்தன் வர்த்தக நிலையங்கள், சந்தை கட்டடத் தொகுதிகள் புனரமைக்க வியாபாரிகள் கோரிக்கை கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதிகள் கடந்த 30 .04.2026 அன்றைய தினம் வீசிய மினி சூறாவளி காற்றின் காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதியின் கூரை முற்றும் முழுதாக காற்றினில் தூக்கி வீசப்பட்டு பாதிப்புக்குள்ளானவை குறிப்பிடத்தக்க விடயமாகும் .அன்று தொடக்கம் இன்று வரை சிறக்க காலநிலை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக குறித்த பரந்தன் வர்த்தக சந்தையின் கூரை வேலைகள் இதுவரையில் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் இங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் காய்கறி வியாபாரிகள் நாளாந்தம் மழையில் தமது காய்கறிகளை நனைத்து மீண்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் .வியாபாரம் செய்வதற்கு கூட கூரை இல்லாமல் மழையில் நனைந்த வண்ணம் தொடர்ச்சியாக வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தை பாதுகாப்பு இன்மை காரணமாக நுகர்வோரும் காய்கறிகள் கொள்வனவு செய்வதற்கு இப்பகுதிகளுக்கு வருவது குறைந்து காணப்படுவதன் காரணமாக மிகவும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாகவும் இங்கு வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வரும் வியாபாரிகள் தெரிவித்தனர்.குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு எமது வாழ்வாதாரத்தை தொடர்ந்து இப்பகுதியில் மேற்கொள்வதற்கு  மிக விரைவில் கட்டடத் தொகுதியை புனரமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement