• May 31 2026

யாழில் சோகம்...!மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Ziya / Jan 23rd 2024, 12:13 pm
image

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி இயற்றாலைப் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாவளை, இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர்  தனது வீட்டில் நேற்று (22) மின் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞருடைய சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


யாழில் சோகம்.மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia யாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி இயற்றாலைப் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.தாவளை, இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேற்படி இளைஞர்  தனது வீட்டில் நேற்று (22) மின் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த இளைஞருடைய சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement