• Dec 13 2024

தாமரைப்பூ பறிக்க சென்றபோது விபரீதம்...! திருமலையில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்...!

Sharmi / Feb 28th 2024, 9:51 am
image

திருகோணமலை, பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு இன்று (28) காலை நண்பருடன் தாமரைப் பூ பறிப்பதற்காக பைபர் படகில் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்த நிலையில் இருவரும் நீரில் மூழ்கியதுடன் நண்பனை காப்பாற்ற முடியாத நிலையில் மற்றைய இளைஞன் நீந்தி கரைக்கு வந்து சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம்  திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும்  தெரியவருகிறது.



தாமரைப்பூ பறிக்க சென்றபோது விபரீதம். திருமலையில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன். திருகோணமலை, பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு இன்று (28) காலை நண்பருடன் தாமரைப் பூ பறிப்பதற்காக பைபர் படகில் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்த நிலையில் இருவரும் நீரில் மூழ்கியதுடன் நண்பனை காப்பாற்ற முடியாத நிலையில் மற்றைய இளைஞன் நீந்தி கரைக்கு வந்து சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலம்  திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும்  தெரியவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement