• Feb 07 2026

23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை

Chithra / Dec 20th 2025, 11:34 am
image


'டித்வா' புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை - அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று முற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டன. 


இதன் ஆரம்ப பயணத்தை குறிக்கும் வகையில், இன்று காலை 8.00 மணிக்கு 'Class S14' வலுச்சக்தி தொகுதியைக் கொண்ட பதுளை - அம்பேவெல விசேட 'உடரட்ட மெனிகே' ரயில் தனது பயணத்தை ஆரம்பித்தது. 


'டித்வா' அனர்த்தம் ஏற்பட்டு 23 நாட்களுக்குப் பின்னரே மலையக பாதையில் இவ்வாறான ஒரு ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது. 


இதன்படி, இன்று முதல் மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை - அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

23 நாட்களின் பின் பதுளையில் இருந்து ஆரம்பமான ரயில் சேவை 'டித்வா' புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை - அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று முற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டன. இதன் ஆரம்ப பயணத்தை குறிக்கும் வகையில், இன்று காலை 8.00 மணிக்கு 'Class S14' வலுச்சக்தி தொகுதியைக் கொண்ட பதுளை - அம்பேவெல விசேட 'உடரட்ட மெனிகே' ரயில் தனது பயணத்தை ஆரம்பித்தது. 'டித்வா' அனர்த்தம் ஏற்பட்டு 23 நாட்களுக்குப் பின்னரே மலையக பாதையில் இவ்வாறான ஒரு ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது. இதன்படி, இன்று முதல் மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை - அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement