கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் இன்று (29) முதல் நாளை மறுதினம் (31) வரை சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பம்பலப்பிட்டி தொடருந்து நிலைய பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படக்கூடும் என அதன் பிரதி பொதுமுகாமையாளர் என் ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இதனால் கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரையான தொடருந்து சேவை ஒரு வழி மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் என்பதால்,
சில சந்தர்ப்பங்களில் தொடருந்து சேவை இரத்து செய்யப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
ரயில் சேவையில் தாமதம் ஏற்படும் - பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு. கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் இன்று (29) முதல் நாளை மறுதினம் (31) வரை சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பம்பலப்பிட்டி தொடருந்து நிலைய பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு தொடருந்து சேவையில் தாமதம் ஏற்படக்கூடும் என அதன் பிரதி பொதுமுகாமையாளர் என் ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.இதனால் கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரையான தொடருந்து சேவை ஒரு வழி மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் என்பதால், சில சந்தர்ப்பங்களில் தொடருந்து சேவை இரத்து செய்யப்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.