• Sep 06 2026

திருகோணமலையில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான பாலின உணர்வு தொடர்பான பயிற்சித் திட்டம்

dorin / Sep 5th 2026, 4:08 pm
image

திருகோணமலை மாவட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) சார்ந்த மற்றும் வலுப்படுத்தும் பொறிமுறைகள் மற்றும் பாலின சமத்துவ பொறுப்புணர்வுள்ள வரவு செலவுத் திட்ட ஆதரவு பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் E-Wing நிறுவனத்தினால் Alinea மற்றும் Pathways to Peace நிதி அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட பொது சுகாதார செவிலியர்களுக்கு (PHM’s) பாலியல் அடிப்படையிலான வன்முறையை குறைத்தல் மற்றும் வலுப்படுத்தும் பொறிமுறை வலுவூட்டல் தொடர்பான பயிற்சி செயலமர்வு 2026.09.05 இன்று (சனிக்கிழமை)  திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. 

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை அடையாளம் காணுதல், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய முறையில் செயற்படுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் சேவைகளை பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்நிகழ்வில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் பாதுகாப்பானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான சமூகத்தையும் நிர்வாகத்தையும் உருவாக்குதல், பாலின சமத்துவத்தை வலுப்படுத்துதல், பொறுப்புக்கூறல் மற்றும் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களும் இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டன.

பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்பதில் சமூக மட்டத்தில் நேரடியாகப் பணியாற்றும் மருத்துவத் தாதியர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் ஈவிங்ஸ் அமைப்பின் பணிப்பாளர் நளினகாந்தன் காயத்திரி மற்றும் வளவாளராக திருகோணமலை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட உத்தியோகத்தர் திருமதி பிரபாளினி குணணேசன் திருகோணமலை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.இனோகா தமயந்தி மற்றும் தம்பலாகாமம் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி  எம்.ஏ.நஸ்ரின் திலானி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலையில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான பாலின உணர்வு தொடர்பான பயிற்சித் திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) சார்ந்த மற்றும் வலுப்படுத்தும் பொறிமுறைகள் மற்றும் பாலின சமத்துவ பொறுப்புணர்வுள்ள வரவு செலவுத் திட்ட ஆதரவு பொறிமுறையை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் E-Wing நிறுவனத்தினால் Alinea மற்றும் Pathways to Peace நிதி அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட பொது சுகாதார செவிலியர்களுக்கு (PHM’s) பாலியல் அடிப்படையிலான வன்முறையை குறைத்தல் மற்றும் வலுப்படுத்தும் பொறிமுறை வலுவூட்டல் தொடர்பான பயிற்சி செயலமர்வு 2026.09.05 இன்று (சனிக்கிழமை)  திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை அடையாளம் காணுதல், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய முறையில் செயற்படுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் சேவைகளை பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்நிகழ்வில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், திருகோணமலை மாவட்டத்தில் பாதுகாப்பானதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான சமூகத்தையும் நிர்வாகத்தையும் உருவாக்குதல், பாலின சமத்துவத்தை வலுப்படுத்துதல், பொறுப்புக்கூறல் மற்றும் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களும் இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டன.பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்பதில் சமூக மட்டத்தில் நேரடியாகப் பணியாற்றும் மருத்துவத் தாதியர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதில் ஈவிங்ஸ் அமைப்பின் பணிப்பாளர் நளினகாந்தன் காயத்திரி மற்றும் வளவாளராக திருகோணமலை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட உத்தியோகத்தர் திருமதி பிரபாளினி குணணேசன் திருகோணமலை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.இனோகா தமயந்தி மற்றும் தம்பலாகாமம் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி  எம்.ஏ.நஸ்ரின் திலானி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement