மியன்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலன் ஊடாக நாடு திரும்பியது.
மியான்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தின் பின் இந்த முப்படை நிவாரண குழு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஏப்ரல் 5 ஆம் திகதி மியன்மாருக்கு அனுப்பப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) மேற்பார்வையின் கீழ் மற்றும் வெளியுறவு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இந் நடவடிக்கை மேகொள்ளப்பட்டது.
அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய இந்தக் குழு, இடம்பெயர்ந்த மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்ய சூழ்நிலை மதிப்பீட்டை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து நடமாடும் மருத்துவமனைகளை நிறுவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்கத் தொடங்கியது.
தம் நாட்டுக்கு மிகவும் அவசியமான வேளையில் வழங்கப்பட்ட உதவிக்கு மியன்மார் அதிகாரிகள் இலங்கை பாராட்டியதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த மற்றும் பரஸ்பர நட்பின் அடையாளமாக இதை கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
மியன்மார் சென்ற முப்படைகளின் மனிதாபிமான நிவாரணக் குழு நாடு திரும்பியது மியன்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலன் ஊடாக நாடு திரும்பியது.மியான்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தின் பின் இந்த முப்படை நிவாரண குழு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஏப்ரல் 5 ஆம் திகதி மியன்மாருக்கு அனுப்பப்பட்டது.பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) மேற்பார்வையின் கீழ் மற்றும் வெளியுறவு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இந் நடவடிக்கை மேகொள்ளப்பட்டது.அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய இந்தக் குழு, இடம்பெயர்ந்த மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்ய சூழ்நிலை மதிப்பீட்டை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து நடமாடும் மருத்துவமனைகளை நிறுவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்கத் தொடங்கியது.தம் நாட்டுக்கு மிகவும் அவசியமான வேளையில் வழங்கப்பட்ட உதவிக்கு மியன்மார் அதிகாரிகள் இலங்கை பாராட்டியதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த மற்றும் பரஸ்பர நட்பின் அடையாளமாக இதை கருதுவதாக தெரிவித்துள்ளனர்.