• May 12 2024

குப்பை கிடங்கில் கண்டறியப்பட்ட பழங்குடியின பெண்ணின் உடல்: தொடரும் மர்ம கொலைகள்! samugammedia

Tamil nila / Apr 5th 2023, 6:01 pm
image

Advertisement

கனடா நாட்டின் வின்னிபெக் பகுதியிலுள்ள குப்பைக் கிடங்கில் பழங்குடியின பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் வின்னிபெக் பகுதியிலுள்ள குப்பை குடக்கில் பழங்குடியின பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த திங்களன்று காவல் அதிகாரி ஷான் பிக் தெரிவித்திருந்தார்.

இறந்த பெண் (Linda Mary Beardy) லிண்டா மேரி பியர்ட்லி(33) என்ற பழங்குடியின பெண் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் லிண்டா மேரிக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

மேலும் சவுத்தன் சீப் நிறுவனத்தின்(SCO) தகவல் படி பியர்ட்லி பழங்குடியின மக்கள் குழுவின் உறுப்பினர் என தெரிய வந்துள்ளது.

”பழங்குடியின மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதும், காணாமல் போவதும், மாற்று பாலினத்தவர்கள் துன்புறுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று SCO கிராண்ட் தலைவர் ஜெர்ரி டேனியல்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மோர்கன் ஹாரிஸ், மார்சிடெஸ் மைரன், ரெபேக்கா கான்டோயிஸ் மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஆகிய நான்கு பழங்குடிப் பெண்களும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தொடர் கொலைகாரன் ஜெர்மி ஸ்கிபிக்கியால் கொல்லப்பட்டதாக பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். இருப்பினும் பொலிஸார் அதை முழுமையாக நம்பவில்லை.

பழங்குடியின பெண்கள் மர்ம முறையில் கொல்லப்படுவதற்கு எதிராக போராடி வரும் கேம்ப்ரியா ஹாரிஸ்,

”பழங்குடியின பெண்ணின் உடல் ஒரு குப்பை கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து ஆச்சரியப்படுவதற்கில்லை” எனக் கூறியுள்ளார்.

அவரது தாயார் மற்றும் மார்சிடிஸ் மைரானின் பிரேத உடல் ப்ரேரி பசுமை நிலப்பரப்பில் எங்காவது இருப்பதாக நம்பப்படுகிறது.

பழங்குடியினப் பெண்களைப் பாதுகாக்க பல முயற்சிகள் செய்து வருவதாக ஹாரிஸ் கூறியுள்ளார்.

"சமீபத்தில் நிறைய தாய்மார்கள் காணாமல் போகின்றனர், மேலும் இந்த பெண் நான்கு குழந்தைகளின் தாய். நான் ஒரு தாயாக இருப்பதால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என ஹாரிஸ் தெரிவித்துள்ளார். 

குப்பை கிடங்கில் கண்டறியப்பட்ட பழங்குடியின பெண்ணின் உடல்: தொடரும் மர்ம கொலைகள் samugammedia கனடா நாட்டின் வின்னிபெக் பகுதியிலுள்ள குப்பைக் கிடங்கில் பழங்குடியின பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் வின்னிபெக் பகுதியிலுள்ள குப்பை குடக்கில் பழங்குடியின பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த திங்களன்று காவல் அதிகாரி ஷான் பிக் தெரிவித்திருந்தார்.இறந்த பெண் (Linda Mary Beardy) லிண்டா மேரி பியர்ட்லி(33) என்ற பழங்குடியின பெண் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் லிண்டா மேரிக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.மேலும் சவுத்தன் சீப் நிறுவனத்தின்(SCO) தகவல் படி பியர்ட்லி பழங்குடியின மக்கள் குழுவின் உறுப்பினர் என தெரிய வந்துள்ளது.”பழங்குடியின மக்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதும், காணாமல் போவதும், மாற்று பாலினத்தவர்கள் துன்புறுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று SCO கிராண்ட் தலைவர் ஜெர்ரி டேனியல்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மோர்கன் ஹாரிஸ், மார்சிடெஸ் மைரன், ரெபேக்கா கான்டோயிஸ் மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஆகிய நான்கு பழங்குடிப் பெண்களும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தொடர் கொலைகாரன் ஜெர்மி ஸ்கிபிக்கியால் கொல்லப்பட்டதாக பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். இருப்பினும் பொலிஸார் அதை முழுமையாக நம்பவில்லை.பழங்குடியின பெண்கள் மர்ம முறையில் கொல்லப்படுவதற்கு எதிராக போராடி வரும் கேம்ப்ரியா ஹாரிஸ்,”பழங்குடியின பெண்ணின் உடல் ஒரு குப்பை கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து ஆச்சரியப்படுவதற்கில்லை” எனக் கூறியுள்ளார்.அவரது தாயார் மற்றும் மார்சிடிஸ் மைரானின் பிரேத உடல் ப்ரேரி பசுமை நிலப்பரப்பில் எங்காவது இருப்பதாக நம்பப்படுகிறது.பழங்குடியினப் பெண்களைப் பாதுகாக்க பல முயற்சிகள் செய்து வருவதாக ஹாரிஸ் கூறியுள்ளார்."சமீபத்தில் நிறைய தாய்மார்கள் காணாமல் போகின்றனர், மேலும் இந்த பெண் நான்கு குழந்தைகளின் தாய். நான் ஒரு தாயாக இருப்பதால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என ஹாரிஸ் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement