• Apr 22 2026

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்!

Ziya / Mar 3rd 2026, 6:14 pm
image


திருகோணமலை மாவட்ட அரச அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட விவசாயக் குழுக் கூட்டமானது இன்று (03) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விவசாயச் செயற்பாடுகள் மற்றும் பயிர் உற்பத்தி நிலவரங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 


குறிப்பாக, விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் தரமான விதை வழங்கல் நடைமுறைகள் தொடர்பாகவும், பயிர்ச்செய்கைக்கு அவசியமான நீர்ப்பாசன வசதிகளை உறுதிப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.


முந்தைய கூட்டங்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய செயல்பாட்டு முன்னேற்றம் குறித்து இதன்போது மதிப்பீடு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அரசாங்க அதிபர், விவசாயிகளின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 


அத்துடன், விவசாயத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, எதிர்காலச் செயல்திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.


தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உணவு உற்பத்தித் திட்டத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் டித்வா சூறாவளி அனர்த்தத்தினால் ஏற்பட்ட பின்னடைவுகளை விரைவாகச் சீர்செய்யும் பொருட்டு, அவசர உணவு உற்பத்தித் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அனைத்துத் திணைக்களங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டதுடன், அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது."


இதன்போது மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி)  ஜெ. ஸ்ரீபதி, தேசிய உர செயலகத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எச். ஜி. எஸ். பிரேமரத்ன, மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள் (நிகழ்நிலை), திணைக்களத் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட விவசாயக் குழுக் கூட்டமானது இன்று (03) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விவசாயச் செயற்பாடுகள் மற்றும் பயிர் உற்பத்தி நிலவரங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும் தரமான விதை வழங்கல் நடைமுறைகள் தொடர்பாகவும், பயிர்ச்செய்கைக்கு அவசியமான நீர்ப்பாசன வசதிகளை உறுதிப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.முந்தைய கூட்டங்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய செயல்பாட்டு முன்னேற்றம் குறித்து இதன்போது மதிப்பீடு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அரசாங்க அதிபர், விவசாயிகளின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். அத்துடன், விவசாயத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, எதிர்காலச் செயல்திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் உணவு உற்பத்தித் திட்டத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் டித்வா சூறாவளி அனர்த்தத்தினால் ஏற்பட்ட பின்னடைவுகளை விரைவாகச் சீர்செய்யும் பொருட்டு, அவசர உணவு உற்பத்தித் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அனைத்துத் திணைக்களங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டதுடன், அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது."இதன்போது மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி)  ஜெ. ஸ்ரீபதி, தேசிய உர செயலகத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எச். ஜி. எஸ். பிரேமரத்ன, மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள் (நிகழ்நிலை), திணைக்களத் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement