• Nov 22 2024

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டு எம்.பிக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்! கட்சி அதிரடி தீர்மானம்

Chithra / Aug 3rd 2024, 4:44 pm
image

  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையொப்பமிட்டு வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர்  தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று சாகர காரியவசம் எந்தக் கடிதம் அனுப்பினாலும் அஞ்சப்போவதில்லை, எனவும் ஜனாதிபதி இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவையினால் தான் நாங்கள் தீர்மானங்களை எடுத்தோம் எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டு எம்.பிக்களுக்கு ஏற்பட்ட சிக்கல் கட்சி அதிரடி தீர்மானம்   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையொப்பமிட்டு வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர்  தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, இன்று சாகர காரியவசம் எந்தக் கடிதம் அனுப்பினாலும் அஞ்சப்போவதில்லை, எனவும் ஜனாதிபதி இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவையினால் தான் நாங்கள் தீர்மானங்களை எடுத்தோம் எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.குறித்த கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement