• Apr 19 2026

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

Chithra / Mar 16th 2026, 9:30 am
image


ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். 


சீனாவின் 90% எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே வருவதாகவும், அதனால் சீனா இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். 


எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சீனா ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்படலாம் என அவர் கூறிய நிலையில் அதற்கான காரணங்களை வௌிப்படுத்தியிருக்கவில்லை. 


அந்த சந்திப்புக்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு சீனா நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

 

இதேவேளை, ஈரான் மீதான போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் விவகாரத்தில், அமெரிக்காவின் நட்பு நாடுகள் உதவத் தவறினால் நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பு "மிக மோசமான எதிர்காலத்தை" சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.


ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள யுக்ரைன் விவகாரத்தில் நாங்கள் நேட்டோ நாடுகளுக்கு மிகவும் மென்மையாக நடந்து கொண்டோம்; அவர்களுக்கு உதவினோம். இப்போது அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்களா என்று பார்ப்போம், என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


நேட்டோ என்பது ஒரு 'ஒருவழி பாதை' (One-way street) என்றும், அமெரிக்கா மற்றவர்களுக்காக எப்போதும் இருக்கும், ஆனால் மற்றவர்கள் அமெரிக்காவிற்குத் தேவைப்படும்போது இருப்பதில்லை என்றும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடான பிரித்தானியா, ஆரம்பத்தில் உதவிக்கு வர மறுத்துவிட்டு, ஈரானின் ஆபத்தான திறன்களை அமெரிக்கா அழித்த பின்னரே இரண்டு கப்பல்களை அனுப்ப முன்வந்ததாக ட்ரம்ப் சாடியுள்ளார்.


"நாங்கள் வெற்றி பெற்ற பிறகு அல்ல, வெற்றி பெறுவதற்கு முன்னரே அந்த கப்பல்கள் எங்களுக்குத் தேவை," என அவர் குறிப்பிட்டுள்ளார். 


இந்நிலையில் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடான எரிபொருள் விநியோகம் முடங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் நிலைமையைத் தணிக்கவும் மாற்று ஏற்றுமதி வழிகளை உருவாக்கவும் முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மோதல் மற்றும் மனிதாபிமான ஆய்வுகளுக்கான மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சுல்தான் அல்-குலைபி (Sultan Al Khulaifi), இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்த நெருக்கடியான சூழலில் வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பு அமைப்புகளை (Defence systems) வலுவாகப் பயன்படுத்தி நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் மேலாதிக்கம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தமது திரவ இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெயை ஏற்றுமதி செய்ய புதிய தரைவழி மற்றும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. 

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். சீனாவின் 90% எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே வருவதாகவும், அதனால் சீனா இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சீனா ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்படலாம் என அவர் கூறிய நிலையில் அதற்கான காரணங்களை வௌிப்படுத்தியிருக்கவில்லை. அந்த சந்திப்புக்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு சீனா நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.  இதேவேளை, ஈரான் மீதான போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் விவகாரத்தில், அமெரிக்காவின் நட்பு நாடுகள் உதவத் தவறினால் நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பு "மிக மோசமான எதிர்காலத்தை" சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள யுக்ரைன் விவகாரத்தில் நாங்கள் நேட்டோ நாடுகளுக்கு மிகவும் மென்மையாக நடந்து கொண்டோம்; அவர்களுக்கு உதவினோம். இப்போது அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்களா என்று பார்ப்போம், என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.நேட்டோ என்பது ஒரு 'ஒருவழி பாதை' (One-way street) என்றும், அமெரிக்கா மற்றவர்களுக்காக எப்போதும் இருக்கும், ஆனால் மற்றவர்கள் அமெரிக்காவிற்குத் தேவைப்படும்போது இருப்பதில்லை என்றும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடான பிரித்தானியா, ஆரம்பத்தில் உதவிக்கு வர மறுத்துவிட்டு, ஈரானின் ஆபத்தான திறன்களை அமெரிக்கா அழித்த பின்னரே இரண்டு கப்பல்களை அனுப்ப முன்வந்ததாக ட்ரம்ப் சாடியுள்ளார்."நாங்கள் வெற்றி பெற்ற பிறகு அல்ல, வெற்றி பெறுவதற்கு முன்னரே அந்த கப்பல்கள் எங்களுக்குத் தேவை," என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ஊடான எரிபொருள் விநியோகம் முடங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகள் நிலைமையைத் தணிக்கவும் மாற்று ஏற்றுமதி வழிகளை உருவாக்கவும் முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.மோதல் மற்றும் மனிதாபிமான ஆய்வுகளுக்கான மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் சுல்தான் அல்-குலைபி (Sultan Al Khulaifi), இதனைத் தெரிவித்துள்ளார்.இந்த நெருக்கடியான சூழலில் வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பு அமைப்புகளை (Defence systems) வலுவாகப் பயன்படுத்தி நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் மேலாதிக்கம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தமது திரவ இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெயை ஏற்றுமதி செய்ய புதிய தரைவழி மற்றும் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. 

Advertisement

Advertisement

Advertisement