• Oct 18 2024

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை புளோரிடாவில் சந்திக்கிறார் ட்ரம்ப்

Tharun / Jul 24th 2024, 6:52 pm
image

Advertisement

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது ரிசார்ட்டில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை  சந்திப்பார்.  இச் சந்திப்பு இரண்டு பேரும் தங்களுக்கு இடையிலான பதட்டத்தைத் தணிக்க விரும்புவதற்கான அறிகுறியாகும்.

காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடர்பாக நெதன்யாகு மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் இடையேயான அழுத்தங்களின் மத்தியில் இச் சந்திப்பு நடைபெறுகிறது.

ட்ரம்பின் 2017-2021 ஆட்சிக் காலத்தில் நெதன்யாகுவும் டிரம்பும் பெரும்பாலும் கருத்தியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் ஒத்திசைந்தனர். அமெரிக்கா அதன் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றியது, இது இஸ்ரேலியர்களை மகிழ்வித்தது  பாலஸ்தீனியர்களை கோபப்படுத்தியது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் எல்லை தாண்டிய தாக்குதலின் போது நெத்தன்யாகுவின் பாதுகாப்பு தோல்விகளை ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.


 

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை புளோரிடாவில் சந்திக்கிறார் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது ரிசார்ட்டில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை  சந்திப்பார்.  இச் சந்திப்பு இரண்டு பேரும் தங்களுக்கு இடையிலான பதட்டத்தைத் தணிக்க விரும்புவதற்கான அறிகுறியாகும்.காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடர்பாக நெதன்யாகு மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் இடையேயான அழுத்தங்களின் மத்தியில் இச் சந்திப்பு நடைபெறுகிறது.ட்ரம்பின் 2017-2021 ஆட்சிக் காலத்தில் நெதன்யாகுவும் டிரம்பும் பெரும்பாலும் கருத்தியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் ஒத்திசைந்தனர். அமெரிக்கா அதன் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றியது, இது இஸ்ரேலியர்களை மகிழ்வித்தது  பாலஸ்தீனியர்களை கோபப்படுத்தியது.இஸ்ரேல் மீதான ஹமாஸ் எல்லை தாண்டிய தாக்குதலின் போது நெத்தன்யாகுவின் பாதுகாப்பு தோல்விகளை ட்ரம்ப் விமர்சித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement