நாடாளுமன்ற தேர்தலில் வெல்வதற்காக பல வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வாக்கை பெற முயல்வதாக திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இம்ரான் மகரூப்பின் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம் தோப்பூர் பிரதேசத்தில் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் இம்ரான் மகரூப் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த பொதுத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும்.
மக்கள் தற்போது அரசியல் மீதும்,அரசியல்வாதிகள் மீதும் வெறுப்புற்ற நிலையில் காணப்படுகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் 36 இலட்சம் வாக்குகள் அளிக்கப்படாமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
இருப்பினும் ஊழலற்ற சிறந்த தலைமைத்துவங்களை உருவாக்க மக்கள் முன்நிற்க வேண்டும்.
இந்த பொதுத் தேர்தலில் பல வேட்பாளர்கள் பணத்தை அள்ளி இறைக்கிறார்கள்.
ஊருக்குள் வரமுடியாத அரசியல்வாதிகள் பணத்தையும்,பொருளையும் கொடுத்து வாக்கை பெறுவதற்கு முனைகிறார்கள்.
இருப்பினும் மக்கள் தெளிவுபெற்று நல்ல தலைமைத்துவங்களை உருவாக்க வாக்களிக்க வேண்டுமென தெரிவித்தார்.
தேர்தலில் வெல்வதற்காக வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வாக்கை பெறமுயற்சி- இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு. நாடாளுமன்ற தேர்தலில் வெல்வதற்காக பல வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வாக்கை பெற முயல்வதாக திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றம் சுமத்தியுள்ளார்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இம்ரான் மகரூப்பின் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம் தோப்பூர் பிரதேசத்தில் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது.இதன் பின்னர் இம்ரான் மகரூப் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,இந்த பொதுத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும்.மக்கள் தற்போது அரசியல் மீதும்,அரசியல்வாதிகள் மீதும் வெறுப்புற்ற நிலையில் காணப்படுகின்றனர்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் 36 இலட்சம் வாக்குகள் அளிக்கப்படாமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.இருப்பினும் ஊழலற்ற சிறந்த தலைமைத்துவங்களை உருவாக்க மக்கள் முன்நிற்க வேண்டும்.இந்த பொதுத் தேர்தலில் பல வேட்பாளர்கள் பணத்தை அள்ளி இறைக்கிறார்கள்.ஊருக்குள் வரமுடியாத அரசியல்வாதிகள் பணத்தையும்,பொருளையும் கொடுத்து வாக்கை பெறுவதற்கு முனைகிறார்கள்.இருப்பினும் மக்கள் தெளிவுபெற்று நல்ல தலைமைத்துவங்களை உருவாக்க வாக்களிக்க வேண்டுமென தெரிவித்தார்.