பிலிப்பைன்ஸின் மின்டானோவில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, சுனாமி அபாயம் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அப்பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடலில் 63 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானுக்கு சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் எச்சரித்துள்ளது.
அதன்படி,நேற்று இரவு பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்றும், அது சில மணி நேரங்கள் தொடரலாம் என்றும் இந்தோனேசியா, பலாவ் மற்றும் மலேசியாவின் சில பகுதிகளை சுனாமி தாக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு விடுபட்ட சுனாமி அபாயம் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிலிப்பைன்ஸில் கடந்தது சுனாமி அபாயம். samugammedia பிலிப்பைன்ஸின் மின்டானோவில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, சுனாமி அபாயம் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று இரவு அப்பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.கடலில் 63 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானுக்கு சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் எச்சரித்துள்ளது.அதன்படி,நேற்று இரவு பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்றும், அது சில மணி நேரங்கள் தொடரலாம் என்றும் இந்தோனேசியா, பலாவ் மற்றும் மலேசியாவின் சில பகுதிகளை சுனாமி தாக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டது.இந்நிலையில் அங்கு விடுபட்ட சுனாமி அபாயம் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.