• Jan 26 2025

ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

Chithra / Jan 23rd 2025, 11:04 am
image


  

ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை மருதமுனை பகுதியில் களவாடி  சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்ய  வருகை தந்த  சந்தேக நபர்களை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம்  அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட பகுதியில்   புதன்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில்  பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான  பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் சந்தேக நபர்கள் வசம் இருந்து, அவர்கள் விற்பனைக்காக கொண்டு வந்த மூன்று ஆடுகள்  இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப் பொருள் என்பன  மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை பகுதியில் கடந்த 21.01.2025 ஆந்  திகதி  மூன்று ஆடுகள் மற்றும் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு  பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய செயற்பட்ட   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்ட  நிலையில்  சம்மாந்துறை தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு பின்பகுதியில்   21 வயதுடைய சந்தேக நபரை கைது செய்தனர். 

பின்னர் கைதான சந்தேக நபரிடம்   மேற்கொண்ட விசாரணையில் போது மற்றுமொரு சந்தேக நபரான 34 வயதுடையவர்  சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளிவாசலுக்கு அருகாமையில்  பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு பொலிஸாரினால் கைதான சந்தேக நபர்களில்  21 வயதுடைய சந்தேக நபர்  சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்   34 வயதுடைய சந்தேக நபர்  பெரியநீலாவணை 02 - மருதமுனை பகுதியைச் சேர்ந்தவர் என  பொலிஸ் விசாரணையில் தெரியவந்தள்ளது.


ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது   ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை மருதமுனை பகுதியில் களவாடி  சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்ய  வருகை தந்த  சந்தேக நபர்களை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம்  அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட பகுதியில்   புதன்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில்  பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான  பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.மேலும் சந்தேக நபர்கள் வசம் இருந்து, அவர்கள் விற்பனைக்காக கொண்டு வந்த மூன்று ஆடுகள்  இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப் பொருள் என்பன  மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை பகுதியில் கடந்த 21.01.2025 ஆந்  திகதி  மூன்று ஆடுகள் மற்றும் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு  பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.இதற்கமைய செயற்பட்ட   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்ட  நிலையில்  சம்மாந்துறை தாருஸ்ஸலாம் பாடசாலைக்கு பின்பகுதியில்   21 வயதுடைய சந்தேக நபரை கைது செய்தனர். பின்னர் கைதான சந்தேக நபரிடம்   மேற்கொண்ட விசாரணையில் போது மற்றுமொரு சந்தேக நபரான 34 வயதுடையவர்  சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளிவாசலுக்கு அருகாமையில்  பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டார்.இவ்வாறு பொலிஸாரினால் கைதான சந்தேக நபர்களில்  21 வயதுடைய சந்தேக நபர்  சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்   34 வயதுடைய சந்தேக நபர்  பெரியநீலாவணை 02 - மருதமுனை பகுதியைச் சேர்ந்தவர் என  பொலிஸ் விசாரணையில் தெரியவந்தள்ளது.

Advertisement

Advertisement

Advertisement