• Apr 18 2026

சட்டவிரோத மரக்குற்றிகளுடன் இருவர் கைது!

shanu / Apr 6th 2026, 4:24 pm
image

வன்னியில் இருந்து பிரபல சட்டவிரோத மரக்கடத்தல்காரர் ஒருவரால் யாழ். சாவகச்சேரி மீசாலை மரக்காலைக்கு கொண்டுவரப்பட்ட 37 தேக்க மரக்குற்றிகளுடன்  இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.


போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று(05) இரவு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.


இதன் போது 37 தேக்கமர குற்றிகளும் மரக்குற்றிகளை ஏற்றி வந்த இரண்டு வாகனங்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.


இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சாவகச்சேரி தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த கைது இட்பெற்றது.


வாகனத்தின் சாரதி தப்பியோடிய நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று (06)சாவகேச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.


சட்டவிரோத மரக்குற்றிகளுடன் இருவர் கைது வன்னியில் இருந்து பிரபல சட்டவிரோத மரக்கடத்தல்காரர் ஒருவரால் யாழ். சாவகச்சேரி மீசாலை மரக்காலைக்கு கொண்டுவரப்பட்ட 37 தேக்க மரக்குற்றிகளுடன்  இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று(05) இரவு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.இதன் போது 37 தேக்கமர குற்றிகளும் மரக்குற்றிகளை ஏற்றி வந்த இரண்டு வாகனங்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சாவகச்சேரி தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த கைது இட்பெற்றது.வாகனத்தின் சாரதி தப்பியோடிய நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று (06)சாவகேச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement