• Nov 24 2024

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

Sharmi / Oct 22nd 2024, 8:47 pm
image

இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும்பிட்டிய வளைவுக்கு அருகில் கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கிப்  பயணித்த தனியார் பஸ்ஸும் இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கப்  பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அலவ்வ - கிரிஉல்ல வீதியின் போயவலன நகரில் பயணிகள் பஸ்ஸும் வானும் இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானின் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனிடையே குளியாப்பிட்டிய கடனெகெதர பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி இன்று(22) காலை விபத்துக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும்பிட்டிய வளைவுக்கு அருகில் கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டிய சூரியவெவ நோக்கிப்  பயணித்த தனியார் பஸ்ஸும் இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கப்  பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, அலவ்வ - கிரிஉல்ல வீதியின் போயவலன நகரில் பயணிகள் பஸ்ஸும் வானும் இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வானின் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இதனிடையே குளியாப்பிட்டிய கடனெகெதர பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி இன்று(22) காலை விபத்துக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement