• Nov 20 2026

நீதிமன்ற உத்தரவின் பேரில் தங்கவைக்கப்பட்ட இரு சிறுவர்கள் திடீர் மாயம்!

Chithra / Nov 20th 2026, 3:59 pm
image


களுத்துறை, லியனகொட பகுதியில் அமைந்துள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தங்கவைக்கப்பட்டிருந்த இரு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சிறுவர்கள் கடந்த 18ஆம் திகதி காலை முதல் காணாமல் போயுள்ளதாகவும், சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பொறுப்பாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


காணாமல் போன இருவரும் 12 மற்றும் 15 வயதுடையவர்கள் எனவும், அவர்களுக்குப் பொறுப்பேற்கும் பாதுகாவலர்கள் எவரும் இல்லை எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


12 வயதுடைய சிறுவன் மத்துகம நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சுமார் ஐந்து அடி உயரமுடைய அவர், இறுதியாக அடர் செம்மஞ்சள் நிற டீசேர்ட்டும் பழுப்பு நிறக் காற்சட்டையும் அணிந்திருந்துள்ளார்.


மற்றைய 15 வயதுடைய சிறுவன் கடந்த நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் இறுதியாக நீல நிற டீசேர்ட்டும் பழுப்பு நிறக் காற்சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறுவர்கள் இருவரையும் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகள் களுத்துறை தலைமையக பொலிஸாரின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


நீதிமன்ற உத்தரவின் பேரில் தங்கவைக்கப்பட்ட இரு சிறுவர்கள் திடீர் மாயம் களுத்துறை, லியனகொட பகுதியில் அமைந்துள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தங்கவைக்கப்பட்டிருந்த இரு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுவர்கள் கடந்த 18ஆம் திகதி காலை முதல் காணாமல் போயுள்ளதாகவும், சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பொறுப்பாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.காணாமல் போன இருவரும் 12 மற்றும் 15 வயதுடையவர்கள் எனவும், அவர்களுக்குப் பொறுப்பேற்கும் பாதுகாவலர்கள் எவரும் இல்லை எனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.12 வயதுடைய சிறுவன் மத்துகம நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்து அடி உயரமுடைய அவர், இறுதியாக அடர் செம்மஞ்சள் நிற டீசேர்ட்டும் பழுப்பு நிறக் காற்சட்டையும் அணிந்திருந்துள்ளார்.மற்றைய 15 வயதுடைய சிறுவன் கடந்த நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் இறுதியாக நீல நிற டீசேர்ட்டும் பழுப்பு நிறக் காற்சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுவர்கள் இருவரையும் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகள் களுத்துறை தலைமையக பொலிஸாரின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement