• Apr 02 2025

திருமலையில் முக்கிய பொருளுடன் கைதான குடும்பஸ்தர்கள்; நடந்தது என்ன?

Sharmi / Dec 20th 2024, 11:18 am
image

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குடும்பஸ்தர் இருவர், ஐஸ் போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்றையதினம்(19) இவர்களை கைது செய்துள்ளனர்.  

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பை ஆறு, சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து 1.530g ஹெரோயின் போதப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் வழங்கிய தகவலை அடுத்து, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நிலாவெளி, இரக்ககண்டி பகுதியில் 5.190g ஹெரோயின் போதைப் பொருளுடன் மற்றவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரையும்  மேலதிக விசாரணைக்காக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

திருமலையில் முக்கிய பொருளுடன் கைதான குடும்பஸ்தர்கள்; நடந்தது என்ன திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், குடும்பஸ்தர் இருவர், ஐஸ் போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்றையதினம்(19) இவர்களை கைது செய்துள்ளனர்.  குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பை ஆறு, சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து 1.530g ஹெரோயின் போதப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த நபர் வழங்கிய தகவலை அடுத்து, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நிலாவெளி, இரக்ககண்டி பகுதியில் 5.190g ஹெரோயின் போதைப் பொருளுடன் மற்றவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்கள் இருவரையும்  மேலதிக விசாரணைக்காக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement