• Apr 28 2026

இரண்டு விவசாயிகள் மின்னல் தாக்கிப் பலி! வயலில் வேலை செய்தபோது சோகம்

Chithra / Apr 28th 2026, 7:53 am
image

அனுராதபுரம், விஜிதபுர பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரண்டு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


அனுராதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது.


இதன்போது, விஜிதபுர பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் தத்தமது வயல் நிலங்களில் வேலை செய்துகொண்டிருந்தனர்.


அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட  மின்னல் தாக்கத்தினால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர்கள் விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 50 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


ஒருவர் கணக்கன்மடுகம பகுதியிலும், மற்றவர் புளியங்குளம் பகுதியிலும் உள்ள வயல் நிலங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.


சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த பொலிஸார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


 மழை மற்றும் இடி மின்னல் காலங்களில் திறந்தவெளிகள், வயல் நிலங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு விவசாயிகள் மின்னல் தாக்கிப் பலி வயலில் வேலை செய்தபோது சோகம் அனுராதபுரம், விஜிதபுர பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரண்டு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அனுராதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலை பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது.இதன்போது, விஜிதபுர பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் தத்தமது வயல் நிலங்களில் வேலை செய்துகொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட  மின்னல் தாக்கத்தினால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 50 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஒருவர் கணக்கன்மடுகம பகுதியிலும், மற்றவர் புளியங்குளம் பகுதியிலும் உள்ள வயல் நிலங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த பொலிஸார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மழை மற்றும் இடி மின்னல் காலங்களில் திறந்தவெளிகள், வயல் நிலங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement