• Aug 01 2026

கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு.! கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Aathira / Aug 1st 2026, 8:55 am
image

கனமழையால் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா 6 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, லக்சபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்மட்டத்தில் ஏற்படக்கூடிய திடீர் மாற்றங்களை கருத்தில் கொண்டு, தேவையற்ற வகையில் ஆற்றங்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு. கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை கனமழையால் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா 6 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாக, லக்சபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால், ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.நீர்மட்டத்தில் ஏற்படக்கூடிய திடீர் மாற்றங்களை கருத்தில் கொண்டு, தேவையற்ற வகையில் ஆற்றங்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement