• Apr 03 2025

காரும், வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - இருவர் காயம்..!! samugammedia

Tamil nila / Feb 4th 2024, 7:38 pm
image

திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியின் ஹூங்கம பகுதியில் கார் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த விபத்தின் போது காரில் இருந்த 5 பேர் மற்றும் வேனில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர்.

அத்தோடு விபத்தில் காயமடைந்த 7 பேர் தங்காலை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்காலை மற்றும் ஹூங்கம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும்  பேருந்து ஒன்றை வேன் கடக்க முற்பட்ட போது எதிரே வந்த கார் மீது வேன் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹூங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரும், வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - இருவர் காயம். samugammedia திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியின் ஹூங்கம பகுதியில் கார் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த இந்த விபத்தின் போது காரில் இருந்த 5 பேர் மற்றும் வேனில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர்.அத்தோடு விபத்தில் காயமடைந்த 7 பேர் தங்காலை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தங்காலை மற்றும் ஹூங்கம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.மேலும்  பேருந்து ஒன்றை வேன் கடக்க முற்பட்ட போது எதிரே வந்த கார் மீது வேன் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹூங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement