• Apr 03 2025

பாரவூர்தி வீதியை விட்டு விலகி கோர விபத்து - இருவர் பலி..!

Chithra / Jan 1st 2024, 1:51 pm
image

 

கட்டுவன – ஊருபொக்க வீதியில் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், குறித்த விபத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஊருபொக்க – ருக்மல்பிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதிய நிலையிலே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில், விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் கட்டுவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி பாரவூர்தியின் சாரதி உயிரிழந்தார்.

அத்துடன், ஏனைய மூன்று பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வரஸ்முல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மற்றுமொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில், ஏனைய இரண்டு பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிடிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாரவூர்தி வீதியை விட்டு விலகி கோர விபத்து - இருவர் பலி.  கட்டுவன – ஊருபொக்க வீதியில் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.அத்துடன், குறித்த விபத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வேக கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஊருபொக்க – ருக்மல்பிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதிய நிலையிலே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.இந்நிலையில், விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் கட்டுவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி பாரவூர்தியின் சாரதி உயிரிழந்தார்.அத்துடன், ஏனைய மூன்று பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வரஸ்முல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மற்றுமொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்தநிலையில், ஏனைய இரண்டு பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிடிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement